கடவுளில் ஜாதிக்குறிப்பு
கடவுளில் ஜாதிக்குறிப்பு
வாணியன் வாழ்த்திட வண்ணான் சுமக்க வடுகன்செட்டி
சேனியன் போற்றத் திரைப்பள்ளி முன்செல்லத் தீங்கரும்பின்
கோணியன் றாழக் கருமான் றுகிலினைக் கொண்டுடுத்து
வேணிய னாகிய தட்டான் புறப்பட்ட வேடிக்கையே
சிவஸ்த லத்தில் ஸ்வாமி புறப்படும் சமயம் மக்கள் ஒரு புலவரிடம் இந்தப் புறப் பாட்டை
ஒன்பது ஜாதிப் பெயர்கள்வரும்படி பாடுங்கள் என்றுவேண்டு கோள் வைக்க புலவர்
இப்படிப் பாடினாராம்.
சரஸ் வதி நாயகன் வாழ்த்துதல் செய்ய ரிஷபம் சுமக்க வைரவமூர்த்தி,
சுப்ரமணியக் கட வுளும், இந்த்ராணிக்கணவனும், போற்றுதல் செய்யவும்
பார்க்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் யாவர்க்கும் முன்னே செல்ல
தித்திக்கும் கரும்பை வளைந்த வில்லாகக் கொண்ட காம தேவன் தாழ்ந்து வணங்க
பெருமை தாங்கிய மான்தோலை யுடுத்திய கடாமுடி மகுடதாரி யாக எங்கும் தட்டாத.
சிவபெருமான் வீதிப் புறப்பாடா எழுந்த ருளியது அதிக வ்நோத மாயிருக்கிறது
என்பதை 9 ஜாதிப் பெயர்கள் வரும்படி பாடவும் என்று வேண்டுதல் செய்ய அவர்
மேலேயுள்ள பாடலை பாடினார்என்ப.