இருபதைத்தானே தீட்ட முடியும்

இருப்பதைத் தானே தீட்ட முடியும் ?

பெரிய தம்பி - சின்னத் தம்பி.

பெரிய தம்பி -
"டேய்! சின்த்தம்பீ! இங்க பார்ரா! வீச்சுக் கத்தியச் சும்மா பில்லேட்டுக் கத்தி கணக்காத் தீட்டீருக்கரம் பார்ரோவ்!"

சின்னத் தம்பி -
"என்னுங்ணா! வெகரந்தெருஞ்ச நீங்களே இப்பிடிச் செய்லாம்ங்களா? நம்மு தலீவரு என்ன சொல்லீருக்கராரு? அத எத்தினியோ விசுக்காக் கேட்டிரக்கர நீங்களே அதுக்கு நேர் மாராச் செய்யரீங்களே!"

பெரிய தம்பி -
"அப்பிடி நானென்ரா தலீவரு சொன்னதுக்கு நேர் மாராச் செஞ்சேன்?"

சின்த்தம்பி -
"தலீவரு, எப்பத்திக்கிமே "கத்தியத் தீட்டாதெ தம்பீ! புத்தியத் தீட்டு!" அப்பிடீண்ணுதேனுங்ணா சொல்லீருக்கராரு? அப்பரொ நீங்க என்றாண்ணா சும்மா கத்திய்த் தீட்டீட்டே இரக்கரீங்களே!"

பெரிய தம்பி -
"அவுருக்கென்ரா! சொல்லி வெச்சுருவாரு! நாமொ நம்முகிட்டொ இரக்கரதத தானெ தீட்ட முடியி?"

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (7-Jan-20, 3:10 pm)
பார்வை : 101

சிறந்த நகைச்சுவைகள்

மேலே