கிறிஸ்துமஸ் நன்னாள்
கிறித்துமஸ் நன்னாள்
நாமெல்லாம் நலமோடு நல்வாழ்கை உலகில் வாழ
நங்கை நல்லாள் ஈன்றெடுத்த மகிமைபெற்ற மகவு
பார் எங்கும் பார்த்திருக்க பசுக்கொட்டிலில் பிறந்து
பசுமரத்தாணியைப் போல் பாமரர் மனதில் உறைந்த
புனித வழிபாட்டின் நாயகனாம் இயேசு பிரானை
சுற்றமும் உறவும் சேர்ந்து ஒரு மனதோடு வணங்கி
பூக்களுடன் புத்தாடை அணிந்து இத்திருநாளினிலே
புனித மாதா பெற்ற புண்ணிய மகன் வாழியவே என
தூய்மையான மனதுடன் துயர் மறந்தே துதிப்போம்
நாமெல்லாம் கொண்டாடும் புனித கிறித்துமஸ் நன்னாளிலே