நன்மதி வெண்பா - நூல் - பாடல் 73
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
பிறனையுன்னும் பேதையோரீஇப் பீதியலாக் கையாள்
அறநீக்கி மாற்றமெதிர் ஆடும் - அறிவில்லாக்
கான்முளைக டிந்துபல கான்மனையைச் சாராத
நோன்மைநன்று நன்மதியே நோக்கு! 73