விவசாயிகள் தினக் கவிதை
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*உலக விவசாயிகள்*
*தினம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
எல்லா மதத்தினரும்
வணங்க வேண்டிய கடவுள்கள்...
எல்லா மனிதர்களும்
கும்பிட வேண்டிய
குலதெய்வங்கள்.....
விவசாயிகள்
உலகத்தின் பசிப்போக்கும்
"அட்சயப்பாத்திரம்"
ஆனால்
அவர்கள் கையிலோ
இன்று
"பிச்சைப்பாத்திரம்......!!"
இவர்களோ
உலகத்தின் அச்சாணி
ஆனால்
இவர்கள்
உடலை மறைக்க இல்லை
போதுமானத் துணி....
பணம் வரும் என்று
விவசாயம் செய்கிறார்கள்....
ஆம்.....!
கடைசியில்
வீட்டுக்கு வருகிறது
இவர்களுடைய பிணம்...!
"விவசாயிகள்
சேற்றில்
கை வைத்தால் தான்
நாம் சோற்றில்
கை வைக்க முடியும்" என்பார்கள்...
இவர்கள்
இப்போது
" விஷத்தில் "தான்
கை வைக்கிறார்கள்
நாம் எதில்
கை வைக்கபோகிறோம்....?
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையே
தீர்மானிக்கும்
ஆற்றல் உடையவர்கள் தான்...
ஆனால்
அவர்கள் விளைவித்த
பொருட்களுக்கு
விலையை தீர்மானிக்கும்
உரிமை இல்லாமல்
அடிமையாக வாழ்கிறார்கள்...
விவசாயிக்கு
பெண் கொடுக்க
மறுக்கிறார்கள்....
அவர்கள்
உணவுப் பொருட்களை
கொடுக்க மறுத்தால்
கம்ப்யூட்டர் கற்றவன்
ஒரு கிலோ அரிசியை
கணினியில் டவுன்லோடு
செய்து தருவானா....?
பொறியியல் கற்றவன்
பெற்ற சான்றிதழை
பொரியல் செய்து தருவானா ?
வக்கீல் படித்தவன்
சட்ட புத்தகத்தை
சமையல் செய்து கொடுப்பானா? உழவனை விட
இந்த உலகத்தில்
உயர்ந்தவன் எவனும் இல்லை...?
கோடி செலவழித்து
இறந்தவர்களுக்கு
" மணிமண்டபம் "
கட்டியது போதும் ....
இனியாவது
நனைகின்ற
"நெல்மணிகளுக்கு"
ஏதாவது கட்டுங்கள்
இல்லை என்றால்
"கோடி" போடப்படும்
உங்களுக்கும் சேர்த்தே....!!
மாண்டவருக்கு
சிலை வைத்து
மாலை போடுவதற்கு தான்
இவர்கள்
ஆட்சி செய்கிறார்களோ.... ?
இலை வைத்து
போட எதுவும் இல்லாமல்
இறந்து போகின்றவர்களுக்கு
இவர்கள் என்று தான்
ஏதாவது செய்வார்களோ....?
விவசாயிகளின் உதிரங்கள்
இடைத்தரகர்கள்
வீட்டு கண்ணாடி குவளையில்
குளிர்பனமாக
உறிஞ்சப்படுகிறது.....
"விளை" நிலங்கள் எல்லாம்
இன்றும் இருக்கிறதது
"விலை" நிலங்களாக.......
சாதுமிரண்டால்
காடு கொள்ளாதது...
விவசாயிகள் அழுதால்
பூயே பொறுக்காது...!
அதற்குச் சாட்சி தான்
ஆங்காங்கே ஏற்படும்
பூகாம்பங்களும்
மழை வெள்ளங்களும்...
விவசாயிகளின் வாழ்க்கையில்
ஒரு விடிவு காலம்
வரவில்லை எனில்....
இந்த உலகத்திற்கு
ஒரு முடிவு காலம் வரும்.....!!!
*உலக விவசாயிகள் தின நல்வாழ்த்துகள்*
*கவிதை ரசிகன்*
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾