இன்று முதல் உலக தியான தினம்
மனம் எனும் ஒன்றே நம்மை வழிநடத்துகிறது
மனமேதான் நம்மைப் பாடாய்ப் படுத்துகிறது
மனம் இல்லையேல் நாமும் விலங்கினம்தான்
மனம் குவிப்பின் துன்பங்கள் பறந்திடும்தான்
தவம் என்றால் விழிப்புணர்வோடு காத்திருப்பது
எதற்கு என்பது ஒருவர் தேவையைப் பொறுத்தது
தவமென்பது தொன்றுதொட்டு இருந்துவருகிறது
தவத்தின் எவெரெஸ்ட்டாக பாரதம் விளங்குகிறது
உலக யோகா தினம் பாரதம் அளித்திட்ட புதையல்
இன்று உலக தியான தினம் உலகுக்கு நம் வழங்கல்
அகத்தவம் மக்களறிவை பட்டைதீட்டும் வைரக்கல்
உலக அமைதியை பளிச்சிடவைக்கும் சலவைக்கல்
முறையாக கற்றுக்கொண்டு தியானம் செய்வோம்
பிரம்ம முகூர்த்தத்தில் தவம் செய்து பழகிடுவோம்
பயிலாதோர் மூச்சு சுவாசத்தைக் கவனித்திடலாம்
இயல்பான மூச்சை கவனித்திடு அதுவும் தவமாகும்
நாம் பலர் தியானம் எனும் தவத்தை நன்கறிவோம்
தொடர்ந்து தவம் செய்யாதிருப்பின் தொடர்வோம்
புதிய அன்பர்களைத் தவம் செய்ய ஊக்குவிப்போம்
அன்றாட வெற்றிடத்தில் அமைதியைக் குவிப்போம்