சர்வதேச மனித ஒற்றுமை தினக் கவிதை
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
*சர்வதேச மனித*
*ஒற்றுமை தினம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
எழுத்துக்களின் ஒற்றுமை
வார்த்தையாகிறது.....
வார்த்தைகளின் ஒற்றுமை
வரியாகிறது....
வரிகளின் ஒற்றுமை
பத்தியாகிறது.....
பத்திகளின் ஒற்றுமை
புத்தகமாகிறது.....
மனிதர்களின் ஒற்றுமை
ஒரு நாட்டின்
முன்னேற்றமாகிறது......
உடல் உறுப்புக்கள்
ஒற்றுமயைின்றி போனால்
நம்மால் வாழ முடியுமா....?
பஞ்சபூதங்கள்
வேற்றுமை பார்த்தால்
நம்மால்
உயிரோடு இருக்க முடியுமா...?
நான்கு மனிதர்கள்
ஒன்றாக இருந்தால் தான்
அது ஒரு குடும்பம்.....
நாற்பது குடும்பங்கள்
ஒற்றுமையாக இருந்தால்தான்
அது ஒரு கிராமம்.....
நானூறு கிராமங்கள்
ஒற்றுமையாக இருந்தால் தான்
அது ஒரு மாவட்டம்.....
முற்பத்தெட்டு மாவட்டங்கள்
ஒற்றுமையாக இருந்தால் தான்
அது ஒரு மாநிலம்....
இருபத்து ஒன்பது மாநிலங்கள்
ஒற்றுமையாக இருந்தால் தான்
அது நமது "இந்தியா......!"
ஒற்றுமையின் வலிமையை
அறிய இதை விட
வேறு ஏதேனும் வேண்டுமோ...?
மனிதா.....!
நாம் சாதியால் பிரிக்கப்பட்டிருக்கிறோம்.....
நாம் மதத்தால் வேறுபடுத்தப்பட்டிருக்கிறோம்....
இனத்தால் தனிமை படுத்தப்பட்டிருக்கிறோம்....
அரசியல் சாணக்கியர்கள்
ஆடும் ஆட்சி ஆட்டத்தில்
நம்மை பகடைக்காயாக
பயன்படுத்துகிறார்கள்......
விழித்தெழுவோம்
பிழைத்துக் கொள்வோம்....
மனிதா !
இயற்கையை பார்......!!
வண்ணங்களின்
ஒற்றுமை தான் வானவில்....
நதிகளின்
ஒற்றுமை தான் கடல்.....
மலர்களின்
ஒற்றுமை தான் மாலை....
மரங்களின்
ஒற்றுமைதான் காடு......
நீர் துளிகளின்
ஒற்றுமை தான் மழை.....
பாறைகளின்
ஒற்றுமை தான் மலை.....
வாயுக்களின்
ஒற்றுமை தான் காற்று....
சப்தங்களின்
ஒற்றுமை தான் இசை....
அணுவின்றி
இவ்வுலகில்
ஒன்றும் இல்லை......
"ஒற்றுமை" இல்லை என்றால்
அந்த அணுவாலும்
ஒரு பயனுமில்லை.......
பணம் முக்கியம்தான்
அதைவிட
நமது "பாரதம்"
முக்கியம் அல்லவா....?
சுயநலம் முக்கியமானது தான்
அதை விட
நமது "சொந்தம் "
முக்கியமானது அல்லவா...?
மதம் முக்கியமானது தான்
அதைவிட "மனிதர்கள்"
முக்கியமானவர்கள் அல்லவா..?
சாதிகளால்
பிரிக்கப்பட்டிருந்தாலும்
சமத்துவத்தால்
ஒன்று பட்டு இருப்போம்.....!
உடையால்
பிரிக்கப்பட்டிருந்தாலும்
உள்ளத்தால்
ஒன்றுபட்டிருப்போம்......!
மதத்தால்
பிரிக்கப்பட்டிருந்தாலும்
மனிதத்தால்
ஒன்றுபட்டிருப்போம்......!
இனத்தால்
பிரிக்கப்பட்டிருந்தாலும்
இதயத்தால் ஒன்றுபட்டிருப்போம்..! மொழியால்
பிரிக்கப்பட்டிருந்தாலும்
அனைவரும் இந்தியர் என்ற
உணர்வில்
ஒன்றுபட்டு இருப்போம்........!
♥அனைவருக்கும் மனித ஒற்றுமை தின நல்வாழ்த்துகள் ♥
*கவிதை ரசிகன்*
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝