பூட்டாதே புன்சிரிப்பை

ஏட்டில் எழுதும் இலக்கியம் அந்நாளில்
வீட்டில் கணினி விரையும் விரலெலாம்
பாட்டாய் பொழியுது பாராயோ நீதோழி
பூட்டாதே புன்சிரிப் பை

பூட்டாமல் புன்சிரிப் பைஉதிர்த்தால் என்தோழா
ஏட்டில் எழுதுவாயா என்சிரிப் பைஎன்று
கேட்டாள் அவள்குறும்பா க

ஏட்டை எடுத்தேன் எழுத்தாணி யாலெழுத
பாட்டோலை யோபாளம் பாளமா கக்கிழிய
பாட்டின் தலைவி சிரித்தாள் சிரித்தாளே
வாட்டமில் லாவெண்பா வாய்



----ஈற்றுச் சீரில் குறில் கூடாது குறில் ஒற்று அல்லது நெடில் வேண்டுமென்பர்
ஆயின்
கேட்டாள் குறும்சிரிப் பில் ---என்று அமைக்கலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Dec-24, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே