கோபுரம் நாணி நிற்கும்

பூபாளம் உன்னெழில் புன்னகையின் ராகமோ
தீபா வளியின்மத் தாப்போ சுடர்விழிகள்
கோபுரத் தின்சிலை போல்நீ நடந்துவந்தால்
கோபுரம் நாணிநிற் கும்

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

அடி எதுகை----பூபா தீபா கோபு கோபு

1 3 ஆம் சீரில் மோனை --- பூ பு தீ தா கோ போ கோ கு

எழுதியவர் : கவின் சாரலன் (22-Dec-24, 6:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே