கீழடி
கீழடி
தொல்லியலின் மேட்டினடி தொன்மைத்தமிழ் பேசுதே
கல்லொடுமண் தோன்றியநம் தமிழலைதான்ஆஎ வீசுதே
மூத்தகுடி நாகரிகம் கொண்ட தமிழ் நாட்டிலே
மூடிமூடி மறைத்தாலும் முளைத்து விருட்ஷ மாகுமே ..!
சுட்டச்செங்கல் சுண்ணாம்பில் செம்மாந்தக் கட்டடம்
எட்டிஎவர் பிடித்திடுவார் எங்கள்
தொழில்நுட்பமும்
வட்டிலிலும் தமிழெழுதி வாழ்ந்திருந்த கட்டமாம்
வெற்றிக்கொடி ஏற்றிவைக்கும் வல்லத் தமிழ்க் கூட்டமாம்..!
வைகைக்கரை ஓரத்திலே வணிகம் செய்த பேரடா
மைத்தடவி மந்திரத்தால் உண்மை மறைப்பதேனடா
நாகரிகம் நாங்கள் வளர்க்க நவீனங்கள் கீழடி
ஏகபோகத் தமிழன்வாழ்வு வந்ததன்றோ மேலடி..!
பொன்மணியில் அணிகலன்கள் பூண்டிருந்தோம் ஜோடனை
மின்னும்மெழில் அத்தனையும் மேன்மையான கைவினை
ஈடில்லா நாகரிகம் எழுதிவைத்தார் ஓட்டில்தான்
கோடியுண்மை புதைந்திருக்கும் கீழடிஎம் நாட்டில்தான்!
ஊர்முழுதும் நீர்கிடைக்க ஓட்டுக்குழாய் ஆனதே
நீர்வளத்து மேலாண்மை நெகிழ்ச்சி கொள்ளவைக்குதே
வேளாண்மை வணிகமுண்டு வாழ்ந்திருந்தார் இன்பமாய்
கோலாகல நாகரிகம் கொண்டிருந்தார் தொன்மமாய்
வரலாற்றை மாற்றிடவே வைத்திடும்பார் கீழடி
குரலெழுப்பி எவர்வரினும் தமிழனுக்குக் கீழடி
நாகரிக வளர்ச்சியோடு நம்தமிழே மூத்ததாம்
நாடெங்கும் ஒலித்திடவே முரசொலித்துப் பாடலாம்..!
#சொ.சாந்தி

