ரெங்கநாதன் ECE

நிறைகுடம் தளும்பாது
என்பது பழமொழி..

நிலையின் திரியா
தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது...

அறனறிந்து மூத்த
அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

என்பது குறள் மொழி...
இவை யாவும் ரெங்கநாதன் வழி..

உலகம் ஒரு நாடக மேடை.. அதில்
நிறைய பேர் நடிகர்களாய்
இருந்த பொழுது ரெங்கநாதன்
தன்னைத் தானே இயக்கிக்
கொண்டிருந்தார்.. நேர்த்தியாய்
இயங்கிக் கொண்டிருந்தார்

பலபேர் கல்லூரி வந்து தம்மை
வளர்த்துக் கொண்ட பொழுது
இவர் தம்மை வளர்த்துக்
கொண்டு கல்லூரி வந்தார்..

கனடா நாடு சென்று பல
காலம் பணிபுரிந்தாலும்
செந்தமிழ் நாடெனும்
போதினிலே இன்பத்தேன்
வந்து பாயுது காதினிலே..
என்ற உணர்வு இவரை
விட்டுப் போனதில்லை...

யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்..
தேசத்தினர் பலருடன் பழகியும்
மொழிகள் பல தெரிந்தும்
தமிழில் ரெங்கநாதன் எழுதும்
கருத்துரைகள் யாவும்
எண்ண ஓவியங்கள்..
வண்ணக் காவியங்கள்...

முகநூலில் உன்
எழுத்துக்களைப் பார்த்து
இருக்கிறேன் அதில் உன் மாறா
முகம் பார்த்துக் கொள்வேன்..

ஏன் என்ற கேள்விகளுக்கு
வாட்ஸப்பில் உன் பதில்கள்
பார்த்து பிரமித்துப் போய்
இருக்கிறேன்.. ரெங்கநாதன்
நீ செல்லும் அரங்கம் எல்லாம்
உன்னைப் போற்றும்..
உன்னை வாழ்த்தும்..

கல்லூரி மாணவர் தலைவர் நீ
தலைமைப் பண்பில் உந்தன்
வேகம் விவேகம் எல்லாம்
இந்த வயதில் எப்படி சாத்தியம்
என வியக்க வைக்கும்
இளம் வயது ஆச்சரியம்...

மதம் சார்ந்த கொள்கை
கொண்டிருந்தாலும் அதில்
மிதம் காட்டும் பகுத்தறிவு
உனது இயல்பு..

உன் சிந்தனை தரும்
வேள்விகளில் நான்
அறிவுத் தேடல் குளிருக்கு
குளிர் காய்ந்திருக்கிறேன்..

நண்பன் ரெங்கநாதன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

🤝😍❤️🌹🪷👍

எழுதியவர் : இரா. சுந்தரராஜன் (15-Oct-25, 10:10 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 4

மேலே