செல்வகணேசன் 07092025
நிறைய பேர் புனித
ஸ்தலங்களுக்கு புனித
பயணம் போவார்கள்...
செல்வ கணேசன் இவரது
வாழ்க்கை பயணமே
ஒரு புனித பயணம்..
அரசு பொறியியல் கல்லூரி
திருநெல் வேலியில்
பொறியியல் படிப்பு..
பார் புகழும் ராஜஸ்தான்
பிர்லா பொறியியல் உயர்
கல்வி நிறுவனத்தில்
முதுகலை படிப்பு..
மலேசியாவில் முனைவர் படிப்பு
மலேசியாவில் அதன் பின்
திருச்சியில் பேராசிரியர் வேலை
சென்னையில் பேராசிரியர் வேலை
எத்தனை மாணவர்கள்
மனக் குளங்களில்
இவரது கல்விப் படகு
பயணித்து இருக்கும்..
எத்தனை எத்தனை குளங்களில்
இவரது கற்பித்தல் அறிவுக் கல்
எறிந்து அற்புத அலைகள்
பரப்பி இருக்கும்..
உலகம் வளர அவை எல்லாம்
உதவி இருக்கும்..
செல்வ கணேசன் நண்பன்
என சொல்வதில் அவருக்கு
பெருமை என்பதை விட
எனக்குப் பெருமை..
பணி புரிந்த அரசுப்
பணியை புறந்தள்ளி
ஆசிரியப் பணி ஆற்றும்
இந்த குடம் நிறைகுடம்..
அறிவை மாணவர்களுக்கு
அள்ளி அள்ளிக் கொடுத்தாலும்
இந்த பாத்திரம் அட்சய பாத்திரம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
உறவினர் மற்றும் நண்பர்
செல்வ கணேசன்..
அன்பன்..
ஆர் சுந்தரராஜன்.
😍🌹❤️🤝🪷

