காட்டுவோம் நன்றி கனிந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஆயிரம் தொல்லை அடுத்தடுத்தே வந்திடினும்
பாயிரம்போல் பண்புடனே பார்த்துதவி – தீயொழுக்க
நோட்டமிலா நல்லோர்க்கு நோன்பெனவே எந்நாளுங்
காட்டுவோம் நன்றி கனிந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Nov-25, 6:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 2

மேலே