நிகார் ஷாஜிக்கு ஒரு நமஸ்காரம்

பணத்தின் மீது மோகம்
இல்லா.. கல்வியின் மீது
மோகம் கொண்ட
அதிசய பெண்மணி
அறிவுக் கண்மணி...
அது நிகார் ஷாஜி.

இந்திய விண்வெளி வரலாற்றை
உலகம் பேசும் போது
உலக விண்வெளி வரலாற்றை
இந்தியா பேசும் போது..
நிகார் ஷாஜிக்கு
முக்கிய இடம் உண்டு..

இவர் படித்த
பள்ளி கல்லூரி பற்றி
பேசும்போது இவர்
பெயர் இருக்கும்..
இவரைப் பற்றி பேசும் போது
பள்ளி கல்லூரி பெயரும் இருக்கும்..

பள்ளியும் கல்லூரியும்
ஒன்றுக்கொன்று திசை
காட்டும்.. அவை இந்திய
தேசத்திற்கே வழிகாட்டும்...

செங்கோட்டை அரசு மேல்
நிலைப் பள்ளி.. அங்கு படித்த
விண்வெளி விஞ்ஞானி
நிகார் ஷாஜி.. இவர்
கட்டிக் கொடுத்த கட்டிடம்..
அதில் இனி வகுப்புகள் நடக்கும்..
இவரது உண்மை உழைப்பு
உயர்வு பற்றி இந்த கட்டிடமே
சொல்லிக் கொடுக்கும்...

சூரியனுக்கு நமஸ்காரம்..
சூரியத் தகவல்கள்
சேகரிக்க ஆதித்யா எல் 1
இந்திய செயற்கைகோள்
வான் வெளி அனுப்பி
வெற்றி கண்ட விண்வெளி
விஞ்ஞானி நிகார் ஷாஜிக்கு
ஒரு நமஸ்காரம்...

சூரிய திசையில்
ஈர்ப்பே இல்லா லெக்ராஞ்சி
புள்ளியில் ஆதித்யா எல் 1
நிலை நிறுத்தி உலகை
தன் பக்கம் ஈர்க்கும்
நிகாரின் சாதனை.. அது
மின் அணுவியல்.. மின்
காந்தவியலில் ஒரு மைல் கல்..

வாழ்த்துக்கள் நிகார்...
👍😍🪷

எழுதியவர் : இரா. சுந்தரராஜன் (26-Nov-25, 4:15 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 3

மேலே