தனியானவள்

தனியானவள்!
———————
என்னை அடைத்துவிடாதீர்கள்
எனக்குப் பல இறக்கைகள் உண்டு!

மணக் கூண்டில் என்னை
அடைத்தபோது இனங்கண்டு
இறக்கைகளை உரிமையோடு
கட்டிக்கொண்டு இணைந்து
பறந்தவள் நான்!

இனக் கூண்டுக்குள்
இடம் தேடுபவள் நானல்ல
என் இனத்துக்கு அறிவு
இரை இசைப்பதே என் நோக்கம்!

இன்னபிற குழுவுக்குள்
என்னை அடிமையாக்கி
இசைந்து போவெனெச்
சொல்லாதீர்கள்!

வட்டங்க்களுக்குள் வண்ணத்
தோகை எனக்கு வேண்டாம்
எண்ணும் எழுத்தும் எங்கெல்லாம் பர்ணமிக்கிறதோ
அங்கெல்லாம் நான் செல்வேன்!

என்னை யாருடனும் கோர்த்துவிடாதீர்கள்
அவரவர் கொள்கைகளுக்குள்
நெரிந்து போவதில் எனக்குச்
சம்மதமில்லை!

என் எண்ணம் எழுத்தோடுதான்
எழுதுபவர் யாராக இருந்தால்
எனக்கென்ன!

நான் தனியானவள்
என் இறக்கைகள் தரமானவை
எங்கெல்லாம் எழுத்துக்கள்
புதிதாய்த் தளைக்கின்றனவோ
அங்கெல்லாம் நான் பறந்து செல்வேன்
ஏனெனில் நான் தனியானவள்!

- யோகராணி கணேசன்
08 ஐப்பசி 2025
-

எழுதியவர் : யோகராணி கணேசன் (9-Oct-25, 1:02 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 78

மேலே