அழகானது காமம்
காமம் கண்டு காய்ந்தனவோ!
உயிரின் துகள் உயிர்கொல்லி ஆகுமெனின் காமம் என ஆகாது நண்பா...
துணையின் தலையசைவில் பூக்கும் உயிர்ஜீவி உனையும் மனிதனாக்கும்
கானகத்தே ஆணகம் காணலாகுமெனில் கண்ணே காதல் என்றோ காமம் என்றோ
பிரித்துறைத்தல் முடியாது
தேடிய துணை உனை தேவதையாய் பார்க்கவேண்டாம் தேவரடியாள் என்று ஆக்காமல் வாழ்ந்துவிட்டால் போதும் வாழ்க்கை உனக்கானதாக இருக்கும்
உடல்பசி உயிர்பசியாக மாறுமெனில்
அது பரிணாம வளர்ச்சியல்ல
மனிதனாக வாழும் அரக்கர் குணம்
காமம் அழகானது காமம் தவறாதே ஆசைக்கு இசைந்தால் அடிமையாக வாழக்கூடும்
வாழ்க்கை தெளிவான பாதையைக் காட்டும் வாழ்ந்து காட்டு
வாழ்த்துகள்... - அருள்