முருகா போற்றி

என்னிடத்தில் உன்னை அன்றி
வேறு எண்ணம் முருகா
அது எப்பொழுதும் இருந்ததில்லை
சத்தியமே முருகா

முத்தெடுக்க மூழ்கும் அந்த
மனிதனுமே முருகா
உன் எண்ணத்திலே மூழ்கிடுவான் பக்தியிலே முருகா

சின்ன சின்ன குறைகளுமே
இருந்தது உண்மை முருகா
என் சிந்தனையில் நீ உதிக்க
மறைந்திடுமே முருகா

மண்ணில் ஊரும் மண்புழுவாய்
இருந்திடுவேன் முருகா
உன் மாசகன்ற முகத்தினையே
பார்த்துவிட்டால் முருகா

பழனி மலை சுவாமி மலை
அழகர்மலை முருகா
உன் பாதங்களில் விழுந்திடுவேன்
பாக்கியம் தா முருகா

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (24-Dec-24, 10:33 pm)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : MURUGAA potri
பார்வை : 8

மேலே