கடைசி சொட்டு

அவன் மிகவும் பலவீனமாக படுக்கையில் புரண்டு படுத்தான். அருகில் உள்ள மேஜைமேல் அந்த பாட்டிலில் ஒருவாயே இருந்தது. அவன் திருட்டுத்தனமாக சேமித்து வைத்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்து விட்டிருந்தது. யாரைக் கேட்டாலும் தரமாட்டார்கள், கிடைக்காது, இருக்காது. அவன் செல்ல நாய் அவனைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. தொங்கிக் கொண்டிருந்த அதன் நாவில் இருந்து ஒரு சொட்டு உமிழ்நீர் தரையில் விழுந்து உடனே ஆவியாகிக் கரைந்தது...

அவன் ஏக்கத்துடன் பாட்டிலைப் பார்த்தான். அந்தக் கடைசி வாயையும் குடித்து விட்டால் தமிழகத்தில் எந்த மூலையிலும் ஒரு சொட்டும் கிடைக்காது என நினைக்கையில் அவனை அறியாமல் அவன் உடல் நடுங்கியது, கைகள் பட படத்தன. நா வரண்டது..

முப்பொழுதும் கிடைத்த தமிழகத்திற்கா இந்த நிலை... அவனால் நம்ப முடியவில்லை... உண்மை சுட்டது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுல் படுத்தி சில மாதங்கள் ஆகியிருந்தது. அனைத்து டாஸ்மாக்குகளும் மூடப்பட்டிருந்தன.

----முரளி

எழுதியவர் : Murali TN (25-Jun-19, 4:52 pm)
Tanglish : kadasi sottu
பார்வை : 601

மேலே