சுரேஷ் சிதம்பரம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுரேஷ் சிதம்பரம் |
இடம் | : பென்னகோணம், பெரம்பலூர் மா |
பிறந்த தேதி | : 23-Jan-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 595 |
புள்ளி | : 115 |
கிறுக்கல்களும், கிழித்தல்களும் தொடர்வதால் வார்த்தைகள் வசப்படாவிடினும் எண்ணங்களை இறக்கி வைக்கும் முயற்சி..
எப்போது..........
உன்னில் தொலைந்தேன்
என்று தெரியவில்லை!
எங்கு...........
உன்னை தொலைத்தேன்
என்றும் தெரியவில்லை!
இப்போது.........
யாரை தேட
நான் தொலைத்த உன்னையா?
இல்லை
உன்னில் தொலைந்த என்னையா?
இரை போடும் மனிதனுக்கு
இரையாகும் வெள்ளாடு போல்
சாதிக்கு இரையாகி மனிதனும்
வீதிக்கு வந்ததென்ன...
ஆணவக் கொலைகளும் வீராப்பும்
அருமை காதலை சிதைப்பதென்ன
படிக்கும் மாணவர் பள்ளியிலும் துடி
துடிக்க துடிக்க இறப்பதென்ன...
சாதி மத வேறுபாடெல்லாம் இத்
தரணியில் நமக்கு தேவையில்லை
ஒற்றுமை ஒன்றே தமிழகத்தை
ஓங்க வைக்கும் நம் நாட்டினிலே..
இரவுகளில் தான்...
எனக்கான உலகம்
என் முன்
தன் கடையை
விரிக்கிறது
இரவுகளில் தான்..
எனக்குள் இருக்கும்
வாசகி,
உண்டதெல்லாம் செரித்து
பெருந்தீனி
தேடி அலைகிறாள்
இரவுகளில் தான்...
என் எழுத்துகள்
எனக்கே தெரியாமல்
சுவாசக் காற்று
பெற்று
வீரிட்டு அழுகின்றன
இரவுகளில் தான்..
என் கண்ணாடிக்கு
பின்னே,
நினைவாக துடிக்கும்
ஆர்வக்கோளாறான
என் கனவுகள்
ஆர்பாட்டம் செய்கின்றன
இரவுகளில் தான்...
எனக்கான அறிமுகம்
எனக்குள்ளே
நிகழ்கிறது
இதே.... இதே....
இரவுகளில் தான்.....
நான் அறிமுகங்களை
பாதியில் நிறுத்தி,
ஆர்ப்பாட்டங்களை அடக்கி,
எழுத்துகளின்
வாயை பொத்தி,
தீனி மூட்டைய
உன்னுடன்
பழகிய நாட்கள்
மீண்டும் ஒரு முறை
கிடைக்குமானால்
இனி வரும் நாட்களில்
நான்
உயிர்வாழ
தேவை இல்லை....
"அந்த சூர ********* மிதிச்சா சரியா இருக்கும் "
கருமம் வீட்டு முன்னாடி இப்படியா மலம் கழிக்கறது . "அப்பா நாற்றம் குடலை புடுங்குது". என்றான் கஜேந்திரன்.
மனிதனின் நாற்றம் தொடங்குகிறது ........இதை முகர பிடிக்காதவர்கள் , என்னோடு பயணிக்காதீர்கள்.
அவன் பெயர் பிச்சாண்டி , மூளை ஒரு பக்கம் அவணுக்கு சிறு பங்கம் விளைவித்தது, அதனால் தான் என்னவோ அவன் ஒரு பித்தன் போல திரிந்தான். இப்படி தெளிந்து திரிந்தவர்கள் தானே சரித்திர தடத்தில் கால்வைத்தவர்கள் . அவன் ஒரு புத்தனையும், ஏசுவையும் பிசைந்து செய்த பித்தன் போல இருப்பான். தண்ணீரை மேனியில் படாமல் தன்னை பாதுகாத்து கொள்ளவான் . அவனிடம் அப்பியிருக்கும் அழு
அடியே!
ஒற்றை நிலவே
வானிலிருந்து வந்தது ஏனோ?
என் கண்ரெதிரே வந்து
என் இதயத்தை மட்டும்
திருடி சென்றது ஏனோ?
கண்ணில் தென்படும்
யாவையும் ரசித்தவன்
வானில் உன்னை தவிர
யாரும் தெரியவில்லையே!
கனவு உலகில் இருக்கின்றேனா ? - இல்லை
காதல் உலகில் விழ்ந்துவிட்டேனா ?
இல்லை வீழ்த்திவிட்டாயா? ?
ரசாயனம் பூசப்பட்ட கண்ணாடியில்
உன் அழகை பார்த்து பார்த்து
உனக்கு என்ன மாற்றம் வந்து விட போகிறது !
ரசாயன கலப்பே இல்லாத
என் கவிதைகளை வாசித்து விட்டு போ !
உன் அழகின் பெருமையெல்லாம்
வாசித்து வாசித்தே !
"பேரழகியாய் " மாறி விடுவாய் !
புதிதாக வாங்கிய "தங்க ஜிமிக்கிகளை "
காதில் மாட்டிக்கொண்டு !
அழகாய் இருக்கிறதா என
தலையாட்டிக்கொண்டே கேட்கிறாய் !
என்ன சொல்வது !
"அழகோடு சேர்ந்துவிட்ட மமதையில்
ஆட்டம் போடுகிறாயா என ஜிமிக்கிகளைத்தான்
கேக்க வேண்டும் போல் இருந்தது "
உன்னை
பார்த்ததும் பதறி
"மச்சி உன் ஆளுடா"
நாளைக்கு பாக்கலாம்..
நண்பர்கள் விலகி ஓட.,
விரைந்து வந்த
நீ உன்னையே
என் மேல் வீசி எறிகிறாய்..
பள்ளி நாட்களில்
பைத்தியம் பிடிக்க வைத்த
புணர்ச்சி விதிகள்
பத்து நொடிகளில்
புரிந்து விட்டது..!?
"உயிர் வரின் உக்குறள்
மெய் விட்டோடும்"
"உடல் மேல் உயிர் வந்து
ஒட்டுவது இயல்பே"..
அவசர வேலை
என ஒருநாள்
விட்டுப் போனாலும்
அன்னம் தண்ணீர்
தொட மாட்டாள்..
கேட்டால்......,
"அமாவாசை விரதமாம்"
என்
கவிதைகளை வாசித்து
"அனைத்தும் அருமை"
புலவர் அய்யா நீங்கள்
என சிரிக்கிறாய்..
நீ
"அணைத்தும்" அருமை
என்று கூட சொல்லலாம்
என்கிறேன்...
"ச்ச்ச்ச்சீய்ய்ய் பொறுக்கிடா நீ"
என சினுங்குகிறாய்...
அந்த
வார இதழில்
என் கவிதை
பிரசுரமாகியிருப்பதைக்
காட்டிச் சிரிக்கிறாய்..,
உன்
ஈர இதழில்
எப்போது பிரசுரமாவது?!
என்றால் குறும்பாய்
முறைக்கிறாய்..