சாதி மத பேதம் வேண்டாமே

இரை போடும் மனிதனுக்கு
இரையாகும் வெள்ளாடு போல்
சாதிக்கு இரையாகி மனிதனும்
வீதிக்கு வந்ததென்ன...

ஆணவக் கொலைகளும் வீராப்பும்
அருமை காதலை சிதைப்பதென்ன
படிக்கும் மாணவர் பள்ளியிலும் துடி
துடிக்க துடிக்க இறப்பதென்ன...

சாதி மத வேறுபாடெல்லாம் இத்
தரணியில் நமக்கு தேவையில்லை
ஒற்றுமை ஒன்றே தமிழகத்தை
ஓங்க வைக்கும் நம் நாட்டினிலே..

எழுதியவர் : ஜெய் ரெட்டி (20-Oct-18, 9:47 pm)
பார்வை : 157

மேலே