தூறல்

தூறல்

""""'''''''''''::::::
உனக்கு நான் வேண்டாமே!
உலர்ந்த தெருவில் விழுந்த
மழைதுளி நான்!
காணாமல் போய்விடுவேன்
நீ பூசிக்கப்படவேண்டியவள்!
ஆராதிக்கப்படவேண்டியவள்!
கரும்மேகங்கள் முட்டிமோதிய
ரணத்தின் துளிகள் நான்!
மண்ணை முகர்ந்து சுடுபுழுதி
கிழப்பி ஆசைகாட்டி
அவசரத்தில் ஓய்ந்துவிடுவேன்!
நீயோ மூச்சு முட்டி பாதி நனைந்து
மிகுதிக்கு காத்திருப்பாய்
உனக்கு நான் வேண்டாமே!
இடியாகவோ மின்னலகவோ
முன்கூட்டிய அறிவித்தல் இல்லாத
அவசரப்பிரசவம் நான்
நீயோ இல்லாத ஊடலுக்கு
பூக்களில் பஞ்சனை விரித்து
தழுவாத தென்றலுடன்
ஒத்திகை பார்த்து
குலையாத முந்தானை சரிசெய்து நாணத்தில்
எரிந்துகொண்டிருப்பாய்!
உனக்கு நான் வேண்டாமே!!!

மௌனம் உடைந்த பூவில்
விழுதெழும்பிய வண்டொன்று
தெற்கோட்டம் இது
தூறல் நின்னுபோச்சு வானம் வெளுக்குது என்றது!

பாதி குளித்து மீதி சிறகில்
தலை துவட்டி ஒரு தேனீருக்கு
ஏங்கும் இயலாமை பறவையின்
ஓலம் எங்கேயோ கேட்டது!!!

ஆக்கம்"" லவன் டென்மார்க்

எழுதியவர் : லவன் டென்மார்க் (20-Oct-18, 10:15 pm)
சேர்த்தது : லவன்
Tanglish : thooral
பார்வை : 247

மேலே