முகம் அறியா கதை

என்
ஒற்றை சாளரமே
ஓரத்தில் உறங்குகிறேன்
ஒளியிழந்த தீபமாய்
கண்களை விற்று
ஓவியத்தை வாங்குவதில்
என்ன பயன்
காலம் கடக்கிறது
காத்து கிடக்கிறேன்
உனக்காக
காயாத தாழம்பூவாய்
கள்ளி செடியின்
முட்கள் எனை
காயப்படுத்தவில்லை
பாலைவன வெம்மையும்
பாடாய் படுத்தவில்லை
அறுத்து போட்ட நெற்கதிராய்
சிறகொடிந்த கிள்ளையாய்
நொடிந்து கிடக்கிறேன்
மூளைக்குள் பூச்சிகள்
பறக்கின்றன
மூச்சொன்றும் நிற்கவில்லை
உன் நினைவுகள் மட்டுமே
நெருஞ்சிமுள்ளாய் என்
இதயத்தை கிழிக்கிறது

எழுதியவர் : உமாபாரதி (20-Oct-18, 11:00 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : mukam ariyaa kathai
பார்வை : 104

மேலே