இயற்கையின் சாபம் ஆற்றுவோம்
#இயற்கையின் சாபம் ஆற்றுவோம்
பென்ஜலொடு பெஞ்சமழை கொஞ்ச நஞ்சமா
பின்னிப்பெடல் எடுக்குதின்னும்
அஞ்சும் வண்ணமா..!
வஞ்சங்கொண்டு வந்தமழை வாட்டி வதைக்குது
வக்கணையாய் வீட்டுக்குள்ளே
வட்ட மடிக்குது..!
சரக்கடிச்சத் தோரணையில்
சண்டி பண்ணுது
சாலையோர மரத்தையெலாம்
தாவி முறிக்குது..!
மலைமீது குந்தியது
பாறை உருட்டுது
மனசாட்சிக் கொன்றேதான்
மனிதர் உண்ணுது..!
நீர்வளர்த்து நிலம்மறைத்துத் தீவுகள் எங்கும்
நிலைக்கெட்டு மனிதர்களோ பள்ளியில் தஞ்சம்
..!
அடைமழையின் தாண்டவங்கள் ஆண்டுக ளாண்டாய்
அநியாயம் செயுமியற்கை
ஆரிடம் சொல்வாய்..!
தர்மங்கள் அழித்துவிட்டார் தரணியி லெங்கும்
தண்டனைகள் அளிக்குமியற்கை
சாமியை மிஞ்சும்..!
நல்லவரா தீயவரா
அறிவ தில்லையே
நாட்டாமை செய்யும்மழை
நம்மைக் கொல்லுதே..!
மாசுமண்டிக் கிடக்கும்பல உளங்கள் மாற்றுவோம்
வளத்தையளிக்கும்
இயற்கையதன் சாபம் ஆற்றுவோம்..!
#சொ.சாந்தி