குமுறும் எரிமலைகள்

குமுறும் எரிமலைகள்
குணம் கெட்டு மனக் குழப்பத்தால் வெடித்துச் சிதறும் மனக் குமுறல்கள்;
குமுறும் எரிமலைகள்
எரியூட்ட வந்த எரிமலைகள்; எமனாய் மாறும் இந்த எரிமலைகள்;
எரிந்தே வெடித்துச் சிதறும் எரிமலைகள்;
எட்டிப்பார்க்கும் அக்கினிக் குழம்புகள்;
குமுறும் எரி கற்குழம்புகள்,
மீட்சி பண்புடன் இருக்கும் கற்கோளின் திடஓட்டில்,
ஏற்படும் சிதைவே எரிமலை.
குமுறி குமுறி வெடிக்கும் இந்த எரிமலைகள்;
எரித்தே கருக்கும் மலை காடு வனங்களை;
எங்கெங்கும் பொங்கிவரும் நெருப்பு ஆறுகள்;
கனல்கக்கும் மலைகள், புவியின்
மத்தியலிருந்து புறப்பட்டுவந்த அனல்கள்;
புரியாத புதிர்கள்,
புவியின் ஆதிகால நெருப்பு ஆடைகள்;
புத்தியுள்ள மனிதனுக்கும் புலப்படாத அதிசயங்கள்.
வெந்து கிடக்கும் புவியும் நொந்து கிடக்கும் மனமும்
எரிமலைகள் தான்,
வாழ்க்கை யெனும் எரிமலை,
வெடித்தே சிதறினால் பெரும் தொல்லை;
மனக்குமுறலும் எரிமலைதான்,
குமுறி வெடித்தால் பேராபத்துதான்;
எரிமலைக்குமுறல், வெடிக்கும் பகுதியை சிதைக்கும்;
மனித எரிமலை வெடித்தால் புவியையே பொசுக்கும்;
மனிதா எரிமலையாய் கொதிக்காதே;
உனக்கே எரியூட்ட நினைக்காதே.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (26-Dec-24, 8:07 pm)
பார்வை : 5

மேலே