காட்டின் கதகதப்பில்
காட்டின் கதகதப்பில்
காட்டின் கதகதப்பில்
காலாற நடந்தவன்
வீசிய காற்று கூட
மூலிகை வாசமாய்
அசையாமல் தூங்கி
நிற்கிறது
அருகில் இருந்த
குளத்து நீர்
அதனுள்
அவ்வப்போது சிறு
அலைகளை எழுப்பி
கிளு கிளுப்பூட்டி
செல்கிறது மென் காற்று
குளத்து நீரின்
நித்திரையை கலைப்பதுதான்
இதன் நோக்கமோ?