அ முத்துவேழப்பன் Muthu - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அ முத்துவேழப்பன் Muthu |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 31-Mar-1961 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 3930 |
புள்ளி | : 263 |
அ. முத்துவேழப்பன் பிறந்தது : விருதுநகர் வளர்ந்து படித்தது கும்பகோணம் கல்லூரிப்படிப்பு அரசு ஆடவர் கல்லூரி கும்பகோணம். பணி: மைய அரசுப் பணியில் 1985ல் அகமதாபாத்தில் துவங்கி இயக்குநராக பணி ஓய்வு பெற்றது சென்னை - இந்திய பொருளாதாரப் பணி (i .E .S) யிலிருந்து ஓய்வு பெற்ற ஆண்டு -மார்ச் 2021 கவிதை தொடர்ந்து எழுத துவங்கிய ஆண்டு 2019
விழுந்து கிடந்ததுபோதும் தம்பி;
எழுந்து வாடா தம்பி;
விடியலும் எழுந்துடிச்சி;
விடைதேடி ஓடு தம்பி;
விழுந்து கிடந்தால் வாழ்வேது தம்பி;
வாழ்ந்து காட்ட புறப்படு தம்பி தம்பி;
வாழ்க்கை என்பது ஒரு முறைதான்
வந்தே போகும் வழிப்பயணம் தான்,
வழக்கெதற்கு தம்பி.
வாழ்ந்தோம் இருந்தோம் போனோம் என்று இருக்காது,
வாழ்வேன் சாதிப்பேன் என்றே இக்கணமே சபதம் எடு தம்பி;
வாழ்ந்து காட்ட பலவிழிகள் உண்டு,
வாழ்ந்து கெடவும் சில வழிகள் உண்டு,
வாழ்ந்து கெடாது வாழ்ந்து காட்டு தம்பி.
சூரியனும் சுட்டெரிக்காது சுகம் நாடினால்,
சுழலும் பிரபஞ்சத்தில் கோள்கள் ஏது தம்பி;
சுற்றி வரும் பூமி நின்று விட்டால் சூணிம் தானட
வேண்டும் வேண்டும்,
வேண்டியது வேண்டும்,
வேண்டியே பலன் கைமேல்
பெற வேண்டும்.
காணி நிலம் வேண்டும்;
காணும் இடம் எல்லாம் பசுமை நிரம்ப வேண்டும்;
கண்ணியம் காக்க வேண்டும்;
திண்ணிய எண்ணம் வேண்டும்;
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
தீயாத நெஞ்சம் வேண்டும்;
தீண்டாத நாக்கு வேண்டும்;
வேண்டாத செயல் செய்யாமல் இருக்கவேண்டும்;
வேற்றுமையின்றி ஒற்றுமையாய் வாழ வேண்டும்.
நோயற்ற உடம்பு வேண்டும்;
நோகாத மனம் வேண்டும்;
தெரியாத அசிங்கம் வேண்டும்;
தெளிவான மனம் வேண்டும்;
தெருவெங்கும் குப்பைகள் நிரம்பாமல் இருக்க வேண்டும்;
தெரிதளில் புரிதல் வேண்டும்;
செயலில் ஊக்கம் ஆக்கம் வேண்டும்;
எண்ணங்கள் யாவும் வண்ணங்களாக இருக்க வேண்ட
திரும்பிப் பார்; திரும்பிப் பார்;
உன்னையே நீ திரும்பிப்பார்;
சாவாகாசமாக ஆசுவாசப்படுத்தி
சற்று நின்று நிதானமாகத் திரும்பிப்பார் ; வாழ்க்கை புத்தகத்தின் பக்கங்களை பக்குவமாய் புறட்டி திரும்பிப்பார்;
படிப்பினை பெறவே திரும்பிப் பார்,
பயணித்த பாதையை அறிய திரும்பிப்பார்;
நண்பன் எதிரி பகைவன் விரோதி துரோகி நல்லவன் கெட்டவன் நியாயக்காரன் அநியாயக்காரன்
பாசக்காரன் ரோசக்காரன், பாவி அப்பாவி பக்கிரி பக்திமான்
என்று பண்முக வேடம் தரித்துத் திரியும் மனிதனே திரும்பிப்பார்;
திரும்பிப்பார்
உன்தேடலில் திகைப்புத் தெரியும்;
உன் தேடலின் தவிப்புத் தெரியும்;
திரும்பிப் பார்; திரும்பிப் பார்;
நீ ஓடிய ஓட்டத
எங்கப்பா எனக்கே அப்பா
அப்பா அப்பா நீயப்பா;
ஆண்ட தெய்வமே நீதானப்பா;
மாண்டே போனாலும்;
மீண்டும் மீண்டும் மனதில் நின்றாய் அப்பா;
அப்பா நீ அதிசயப் பிறவியப்பா;
அப்பா நீ என்றன் ஆயுல் ரேகை அப்பா;
உண்டும் உண்ணாமல் உறங்கியும் உறங்காமல்
ஊமையாய் இருந்து, உன்னை உருக்கி
என்னை உருவாக்கினாயே அப்பா.
அப்பா அப்பா அப்பப்பா
நீ பட்ட துன்பம் துயரம்
ஆயிரம் ஆயிரப்பா;
தூணாய் இருந்தாயே அப்பா
சிறு தூசி துரும்பு கூட என்மீது படாமல் காத்தாயேயப்பா;
துறவியாய் வாழ்ந்து
என் பிறவிக்கு பெருமை சேர்த்தாயே அப்பா;
ஊமையாய் இருந்து
உயிர் கொடுத்து வளர்த்தாயே அப்பா;
வந்த கவலைகளை மனதில் சுமந்து உன்னை வதைத்து,
மகிழ்ச்ச
சொல் சொல் பதில் சொல்
தவறுக்கு பதில் சொல்
தவறாமல் பதில் சொல்;
தடுமாறமல் பதில் சொல்
தன்னலம் இன்றி பதில் சொல்;
சுற்றிவளைக்காது பதில் சொல்;
சொல் சொல் சுருங்கச் சொல்;
பிறர் மனதை காயபடுத்தாது பதில் சொல்;
மனதில் பதியுமாறு பதில் சொல்;
மண்டையில் ஓங்கி அடிப்பது போல் பதில் சொல்;
கேள்விக்கு பதில் சொல்;
கேலி செய்யாது பதில் சொல்;
கேட்ட கேள்விக்கு பதில் சொல்;
பாய்ந்து அடிப்பதை விட
பதிலில் வேண்டும் பதிலடி;
சொல் சொல் சொல்லும் பதிலை தெளிவாக சொல்;
பதிலுக்கு பதில் பதிலடி கொடுத்தால் தீராது பகை
கேள்விக்கு பதில் கேட்காமல் போனாலே முட்டாள் புரிந்துகொள்;
திரும்பி திரும்பி கேட்டால் வரும் ஒரே பதில்;
வணக்கம். 400 கவிஞர்கள் நூலாசிரியர்களாக இணைந்து படைத்த வரலாற்று சிறப்பு மிகுந்த "கவிநானூறு" எனும் நூலினை 46 வது சென்னைப் புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் மூலம் வெளியிட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் அடுத்த முயற்சியாக 47 வது சென்னைப்புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் மூலம் சனவரி 2024 ஆம் ஆண்டு வெளியிடும் நோக்கில் "ஐந்திணை ஐந்நூறு" எனும் மரபு நூலினை 500 கவிஞர்கள் இணைந்து படைக்க திட்டமிட்டுள்ளோம். குறிஞ்சியைப் பற்றி 100 பாவலர்களும், முல்லையைப் பற்றி 100 பாவலர்களும் , மருதம் பற்றி 100 பாவலர்களும், நெய்தல் பற்றி 100 பாவலர்களும், பாலையைப் பற்றி 100 பாவலர்களும் என ஐந்து திணைகளைப் பற்றியும்
சொல்லத் தவித்ததை
சொல்லத்தெரியல
சொந்தம் சொந்தம் என்று தேடியும்
சொந்தம் புரியல
பந்தம் இருந்தும் பயம் தெளியல
இது தான் என்ன ஜென்மமோ
சொல்லித் தந்ததை அள்ளிப்பருக முடியல
அருகில் இருந்தும் அசைந்து கொடுக்கல
இது தான் இந்த ஜென்மம்
மெல்ல நகை((நினை)க்கையில்
செல்ல நினைத்தால் வந்திடுமோ சொந்தம்
சொல்லத் தவிப்பதை
சொல்லாவிடினும் வந்திடுமே வெட்கம்
செல்ல நகையில
வெல்லத் தவிப்பது இந்த இதழ்களோ
சொர்க்கத்தை தேடி வந்த வெட்கம் தான்
தடை போட்டது
பக்கம் வந்தும் தான்
தள்ளிச் சென்றாலும்
அள்ளிச் சென்றாலும்
சுடுவது இந்த நாணம் தான்
சொல்லித் தறாத பாடம் தான்
சொக்குப் பொடி போடாதே நீயும் தான்
மனமே மனமே
ஜெயம் உண்டு ஜெயம் உண்டு,
பயம் ஏன் மனமே;
செயல் ஒன்று ஜெயம் உண்டு,
பயம் இல்லை மனமே;
சொல் ஒன்று செயலொன்று
வேண்டாம் மனமே.
ஜெகம் உண்டு ஜனம் உண்டு,
பயம் இல்லை மனமே;
செல் என்று செல் என்று கால்கள் சொன்னாலும்,
சற்றே கவனம் வேண்டும் மனமே.
சொல்வதில் எல்லாம் உண்மை இல்லை,
கவனம்கொள் மனமே.
அய்யம் என்றும் வெற்றி தருவதில்லை மனமே;
ஐம்புலனை அடக்கியவன் வீழ்ந்ததில்லை;
அன்பே உலகின் உயிர் நாடி மனமே;
எனவே,
அன்பு என்றென்றும், நிறந்தறமாக
நிலைக்க வேண்டும் மனமே.
நற்பண்பும் பணிவும் இருந்தால்,
நல்லோர் ஆவது உறுதி, மனமே.
நாற்திசையும் உனக்கடிமை மனமே;
வல்லோர்களையும் வீழ்த்த,
வள்ளலாகி
உருளும் சக்கரமாய் உயிரது உடலுள்
பொருளது அறியாமல் நாளும் நகர்கையில்
அருமை உணராமல் அல்பகல் உறக்கம்
கருவிழி காண்பதெல்லாம் சொந்தமென மனமும்
கிடைப்பதை எடுத்தும் மறைத்தே வைத்து
படித்ததை எல்லாம் உடைப்பில் போட்டே
நடிப்பது மட்டும் நலந்தரும் என்றெண்ணி
இடியென சிரித்தே எவரையும் ஏமாற்றி
விழிநீர் விடுவோர் இடத்தில் இரக்கமின்றி
அழிவே தமக்கு இல்லை இனியென்றே
பழிக்கு அஞ்சாமல் பலவகை தவறுகளை
தழைக்க செய்யும் தரமிக்க செல்வந்தர்
மக்களால் தேர்ந்தெடுக்கும் ஆட்சியில் பதவியை
சிக்கலே இன்றி பணத்தால் வாங்கியே
சொக்கத் தங்கமென சூளுரை பேசியே
மக்களை ஏமாற்றி பொதுசொத்தை திருடியே
வாழும் மனிதருக்கு தலைவர் என்
ஓகோகோ மனிதர்களே ஓடி ஓடித் திரிவதேன்;
கூடிகூடி வாழ்ந்திடவே
குறை கூறுவதை விட்டுவிடுங்கள்.
ஓகோகோ மனிதர்களே ஒருமுறை கேளுங்கள்;
ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் வாழந்திடுங்கள்;
ஓலம் விடுவதை விட்டு
ஒற்றுமையாய் வாழ்ந்திடுங்கள்;
பொய்யைவிட்டு உண்மையை நிலைநாட்ட வந்திடுங்கள்;
ஓகோகோ
பதுங்கிடும் மனிதனிடம்
பயன் தேட முடியாது;
பாய்திடும் மனிதனிடம்
பன்பை தேட முடியாது;
பாதை அறியாத கால்கள் வீடு வந்து சேராது.
பாம்பிடம் இரக்கம் காட்ட முடியாது.
ஓகோகோ மனிதர்களே
வாழ்வை ஓட்டப்பந்தயமாக்கு வதை நிறுத்துங்கள்.
வாழத்தெரியாது,
உண்மையை பொய்யாக்கி;
பொய்யை மெய்யாக்கி;
வாழத்துடிப்பதைவிட்டு விடுங்கள்;
கொசுவுக்கு விடை கொடுப்பவர் யாரு;
கொசு தொல்லையை விரட்ட ,
வீட்டையே கொளுத்தினால் போகுமா பாரு;
விருந்துண்ண விரட்டியே வரும் கொசுவைப்பாரு;
விட்டா பாரு என்றே விடா பிடியாக,
வேட்டையாடவரும் கொசுவைக்கேளு.
அது படுத்தும் பாட்டைப் பாரு;
சிறுசா இருக்கு பாரு;
சீறிவரும் கொசுவின் மூக்கை பாரு;
அது
செய்யும் சேட்டையை கேளு;
டெங்கு சிக்கன் குன்னியா யானைக்கால் வியாதிஎன்று
பெரிய பெரிய நோயை தருபவர் யார் கேளு.
படுத்துறங்க விடாமல் பாடாய் படுத்து கின்றான் பாரு;
படை எடுத்தே சுத்தி வருகிறார் பாரு;
தூக்கத்தைக் கெடுத்து துன்புறுத்த வருகின்றார் பாரு;
துடிக்க துடிக்க கத்தவிட்டே;
இரத்தத்தை உறிஞ்சிகிறார
ஒரு சாண் வயிறு,
ஒருசாண் வயிறுயிது,
உருட்டிப் பாக்குது;
உடம்பை ஆட்டிப்படைக்கிது;
ஓட ஓட விரட்டுது
படாய் படுத்தி,
ஓடாய் உடலை தேயவைக்குது.
மாடாய் உழைக்கும் மனிதனாகட்டும்,
மாளிகையில் வசிக்கும் மனிதனாகட்டும்,
ஒருசாண் வயிற்றுக்கு போரட வைக்கிது;
சிறிது நேரம் தவறினாலும்;
சினம் கொள்ள வைக்கிது;
சிடு சிடு என்றே சீறிப்பாய வைக்குது.
சிற்றுண்டியோ, பேறுண்டியோ;
வேலா வேலை உணவு கிடைக்கவில்லை என்றால்
வாட்டியே உடலை வருத்துது.
ஆகாரம் கிடைக்கவில்லை என்றால்,
ஆட்டம் காட்டுது.
ஒராயிரம் பண்டங்கள் பதார்த்தங்கள் இருந்தாலும்,
எதார்த்தமாக எடுத்து உண்ண முடியாத வயிறிது,
எல்லை மீறினால், அஜீரணத்தொ