வீணாக வேண்டாம் பருவம்

சொல்லத் தவித்ததை
சொல்லத்தெரியல
சொந்தம் சொந்தம் என்று தேடியும்
சொந்தம் புரியல
பந்தம் இருந்தும் பயம் தெளியல
இது தான் என்ன ஜென்மமோ

சொல்லித் தந்ததை அள்ளிப்பருக முடியல
அருகில் இருந்தும் அசைந்து கொடுக்கல
இது தான் இந்த ஜென்மம்

மெல்ல நகை((நினை)க்கையில்
செல்ல நினைத்தால் வந்திடுமோ சொந்தம்

சொல்லத் தவிப்பதை
சொல்லாவிடினும் வந்திடுமே வெட்கம்

செல்ல நகையில
வெல்லத் தவிப்பது இந்த இதழ்களோ

சொர்க்கத்தை தேடி வந்த வெட்கம் தான்
தடை போட்டது
பக்கம் வந்தும் தான்

தள்ளிச் சென்றாலும்
அள்ளிச் சென்றாலும்
சுடுவது இந்த நாணம் தான்

சொல்லித் தறாத பாடம் தான்
சொக்குப் பொடி போடாதே நீயும் தான்

செக்கச் சிவந்த கண்கள்தான்
தென்றல் வந்து தாங்கும் தான்
சொந்தம் சொந்தம் எங்கே என்று தேடும் கண்கள் தான்
சும்மா விடாது சுட்டெடுக்கும் இந்த
நினைப்புத்தான்

அட தேடி வந்த ஆசைகள் தான்
தெம்மாங்கு பாட தவிக்குது மோகம் தான்

தேடும் கண்கள் தான்
திரு திருவென்றே முழித்து போடும் இந்த நாடகம் தான்

அட உரசலில் வரும் ஊடல்தான்
உரசிப்பாரு அப்புறம் தெரியும் உணர்ச்சியின் தாகம்தான்

வயசுப்பிள்ளை கோபம் தான்
வந்தே பிடிக்கும் சாபம் தான்

பாடும் விழிகள் தான்
படுத்துறங்க இமையைத்தேடும் தான்

பாடாய் படுத்தியதும் இந்த இமைகள்தான்
பேசிட தடை போட்டது இந்த பெண்மைதான்

பேசாமல் நீ இருந்தால் பிடிவாதம் பிடிக்கும் இந்த ஆண்மைதான்


பழிதீர்க்க தவிப்பது இந்த இளமைதான்
பாசாங்கு மொழி பேசுவது உன்றன் கண்கள்தான்

அந்தரங்க பாசைதான்
அடடா
ஆட்டிப்படைப்பது நியாம் தான்

மந்திரம் போட்டது
உன் வயது தான்
மத்தாப்பாய் சரிப்பது இந்த
நினைப்புத்தான்;


ஆகாயம் மெல்ல நனைக்குதாம்
அந்த இதயத்துடிப்பு மெல்ல மெல்ல தவிக்குதாம்

அடடா இது என்ன புது ராகம்
ஆட்டிப்படைக்குது இந்த நாணம்.

அது தான் அது தான்
வந்த தாகம் தந்த மோகம்
நீயும் வெந்து சாகும்

வம்பு பேச இல்லை இந்த நேரம்
வீம்மாய் இருந்தால் விடுமோ மோகம்
விளையாடத் துடிக்கிது இந்த தேகம்

விருந்தாகப்போவது வந்த நேரம்
விரு விரு என்று வந்தால் தீரும்
விழுந்து கிடந்தால் என்ன பாவம்

விரும்பித் தந்தால் போதும்
விரட்டி விரட்டி வருகிறது இந்த பாதாம்
வெட்கத்தை விரட்ட என்ன பாடம்
வெறுதாய் கேட்டால்
விடுமோ மனபாரம்.

விரட்டி விரட்டி வந்தது போதும்
விவரம் எதுவும் இருந்தால் கூறும்.

விளக்கு வைக்கும் நேரம்
விருந்தாக வேண்டாம் இந்த தேகம்

விடளைப்பரும் தந்த தாகம்
வீணாக வேண்டாம் பருவம்
அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (25-Dec-21, 5:40 pm)
பார்வை : 85

மேலே