நாளை மழையென்று

நாளை மழையென்று
நேற்றிருந்தேன் - இன்று அதைச் சேர வீற்றிருந்தேன்...

தூரும் மழையென்று
பார்த்திருந்தேன்...
அதில் நனைய ஆசைகள்
சேர்த்திருந்தேன்...

சாரல் வர ஜன்னல்
திறந்திருந்தேன் - நான்
வாயிற்படியோரம்
தவமிருந்தேன்...

மின்னல் காணத்தான் தவித்திருந்தேன்...
மின்சாரக் காற்றெல்லாம்
தவிர்த்திருந்தேன்...

இடியின் சத்தத்தில்
இசை கண்டேன்...
என் உயிரை இதமாக்கும்
விசை கண்டேன்...

துளிகள் விழத்துவங்க
அகம் குளிர்ந்தேன்...
முதல் தூரலை
விரலில் நான் பிடித்தேன்...

இளைய வெளிச்சத்தில்
இனைந்துவிட்டேன்...
காலணிகள் தவிர்த்தெந்தன்
கால் நனைத்தேன்...

மழையைத் தொட்டதால்
என் மேலும்
சிறு இலைகள் துளிர்ப்பதனை என்னவென்பேன்?

எழுதியவர் : கலைவாணி (25-Dec-21, 9:56 am)
சேர்த்தது : Mahakalai
பார்வை : 1111

மேலே