நம்ம ஊர் போல வருமா

நம்ம ஊர் போல வருமா

பணத்துக்கு ஆசைப்பட்டுப்
பரலோகம் போவதுபோல் //
பணமொன்றே பெரிதென்று
பரிதவிக்கும் மூடர்களால் //
வெளிநாடென்று வந்தவர்கள்
வேதனைகள் தொடர்கிறது//
நம்நாடு சொர்க்கமாய்
நலத்தோடு வாழவைக்கும் //
குளிரில்லை பனியில்லை
குறையேதும் நமக்கில்லை//
வீட்டுக்குவீடு கிணறுண்டு
வீட்டுக்கோ வாடையில்லை//
எக்கருமம் எதுவானாலும்
எம்மொழியிலே பேசிடுவோம்//
கலாச்சாரம் பண்பாடு
கடுகளவும் மாறாது //
எம்மொழி எம்மினம்
ஏற்றம்தரும் கலைகளோடு //
இன்பத்தோடு வாழ்ந்திடும்
நம்மஊர் போலவருமா //
கவிதாசன்

எழுதியவர் : கவிதாசன் (28-Mar-25, 5:56 pm)
சேர்த்தது : kavithasan
பார்வை : 24

சிறந்த கவிதைகள்

மேலே