ஓட்டை

ஓட்டை

கல்லெரிந்து
கவலை மறந்து
விறட்டிய புல்லினம்
பட்ட கவலை
தெரியா சிறுவயது
பதின்மர் நினைப்பு
மாறுதல் காணுது …..

தளிர் மரம்
கிளை நிழல்
விரிசல் ஓட்டை
பட்சிகள் ஏதும் காணோம்
நின்ற மரம்
புது நாமம் தரிக்க
பட்டப் பெயர்
பட்ட மரமாம்…

இப்போ
எதற்கு
வீணான கவலை !
பட்சிகள் எப்படியும்
வாழ்ந்துவிடும்
அவைகளுக்கு
அங்கிகாரம் தேவையில்லை
நற்சான்றிதழ் ஏந்தி
நல் வாழ்க்கையை
நிறைவு செய்ய ….

இங்கே
அஞ்சுக்கும் பத்துக்கும்
அலைபாயும்
கிழட்டு
பட்டினி பட்சிகள்
கூச்சலிட
வீசிய கற்கள்
விடுமுறை ஏற்க !

எழுதியவர் : மு.தருமராஜு (27-Mar-25, 5:34 pm)
Tanglish : otaai
பார்வை : 29

சிறந்த கவிதைகள்

மேலே