சோதனை

சோதனை !

வசதிக்கும் வாய்ப்புக்கும்
வெகுமதி பரிசளிக்கும்
அவகாசம்
பரிந்துரைக்க
கால நேரம் சொல்கிறது
காற்றுள்ள போதே
தேடிக் கொள் !
கடன் பட்டவன்
கொடுக்க வேண்டி
கதவை தட்டியது
காதுக்கு கேட்கவில்லையா ?

சூரியனும் சந்திரனும்
விருந்து பரிமாற
தூங்கி வழியாதே !

அடித்த காற்று
நாள் காட்டியை சரி பார்க்க !
நகரா மரத்தை
வேண்டும் மண்
சுவிகாரம் எடுத்துக் கொள்ளும்
அதற்கு வேலை உண்டு
உனக்கு உண்டா ?
இருந்தால் தூற்றுபவர் முன்
செய்து காட்டு
தன்னிச்சையாக …..
ஏனெனில்
உன்னை தன்னந் தனியாகத்தான்
கொண்டு வந்தேன் !
சோதனை செய்ய இல்லை !
காலத்தே
சாதனையை முறியடிக்க !

என்ன தயக்கம் !
ஏனிந்த மயக்கம் !
சகுனம் பார்க்காதே
அதனுடைய குணமே
அதற்கே தெரியாது !

வெளியே வா
வெளிச்சம் உள்ளே இல்லை
மின்சாரத் தடை
சரிசெய்ய
குருட்டு இருட்டு
நடை கட்டிவிடும் !

எழுதியவர் : மு.தருமராஜு (26-Mar-25, 12:53 pm)
Tanglish : sothanai
பார்வை : 34

மேலே