எப்போதும் ஏகாந்தமே
வெறும் சோகம் கண்ட மனம்
கரு மேகம் கண்ட வானம்
அது கோழையோ, மழலையோ, மழையோ
உதிரும் நீர் உயிர்துளியே
தயங்கிய மனம் கொண்டு
உளியாய் எழுதுகோலில்
குருதிபோல் மைவழிய
செதுக்கினேன் என் வரிகளை
வாடிய பூ
பூ தேடும் தேனீ
வரண்ட நா
நா தேடும் சொற்கள்
வாடிய உன் மனம்
என்னை தேடும் நீ
உன்னை நாடும் நான்.....
சுழன்றது காலம்
என் மனம் வாடியது
என் விழி தேடியது
மிஞ்சியது காந்தமாய்
ஏகாந்தமே...