இந்திரஜித் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : இந்திரஜித் |
| இடம் | : Tamilnadu |
| பிறந்த தேதி | : 30-Apr-2001 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 22-Mar-2020 |
| பார்த்தவர்கள் | : 155 |
| புள்ளி | : 21 |
உயிர் ஊட்டபட்ட எழுத்துக்களை வரிசை படுத்துவது கவிதை...!!
உவமை எடுத்துரைத்து உயிரான எழுத்தை கோர்ப்பது எமது கடமை...!!!
உடையது என்று அறிந்த மணம் மடையதாயிற்று
தனிமை தேடிய மணம்
கனிமை மறந்து
வலிமை உறைந்து
ஊன்று கோல் தேடியது
வரம் கேப்பேன்
தரம் குறையாத
உற்ற ஊன்று கோல் வேண்டும் என்று
வரம் வளமாய் கேட்பது
கோமகன் ஆக அல்ல
கோபம் இல்லா
தன்மை மாறா குணம் காண....
நீ எட்டியப் படி
பலரும் தொட்டு பார்க்க
துடிக்கும் படி...
உன்னை நான் கண்ட வேளை எற்பாடு
நீ இப்போது புறப்பட தயாராகிவிட்டாய்....
அதற்கிடையில் ஓர் உறவு முளைத்து தழைத்தோங்கியது...
பரவும் பல வகை உறவுக்கிடையில்
உலவும் உயிராய் என்னுள் நீ மாறினாய்....
பல வாதங்கள் முண்ணுக்கு பிண்
முரணாக நம்மிடையே...
ஓயாத கடல் அலைகள் போல்
ஒரு நிமிடம் கூட ஒட்டாமல் இருக்கும் உன் உதடுகள்...
நிசப்தத்திலும் ஒலிக்கும் உன் குரல்....
யாரை கண்டும் ஒட்டிக்கொள்ளும் ஒட்டாம் புல் இல்லை
தனிமையை ரசிக்கும் துளசி மாடமும் இல்லை
பலரும் விரும்பி ஏற்கும் மலராய் நீ....
என்னுடன் வந்தாய்
என்னுடன் பயணித்தாய்
எனக்கு முன்
வெறும் சோகம் கண்ட மனம்
கரு மேகம் கண்ட வானம்
அது கோழையோ, மழலையோ, மழையோ
உதிரும் நீர் உயிர்துளியே
தயங்கிய மனம் கொண்டு
உளியாய் எழுதுகோலில்
குருதிபோல் மைவழிய
செதுக்கினேன் என் வரிகளை
வாடிய பூ
பூ தேடும் தேனீ
வரண்ட நா
நா தேடும் சொற்கள்
வாடிய உன் மனம்
என்னை தேடும் நீ
உன்னை நாடும் நான்.....
சுழன்றது காலம்
என் மனம் வாடியது
என் விழி தேடியது
மிஞ்சியது காந்தமாய்
ஏகாந்தமே...
கண்மை அழியா கண்மூடி
இளம்பிறை இதழ் இரண்டும் இனைந்தே இருக்க...
கொடி போல் முன் நெற்றியில்
சிகை படர
பஞ்சணையில்
படுத்திருக்க...
ஒற்றை வெண்விழி
பார்வை அவளின் மேல்
படர்ந்தது
அறையின் தாழ்வார முகட்டிலிருந்து....
ஒற்றை கண்ணனுக்கு எட்டிய பார்வை
இருவிழி இருந்தும்
குறுடான கணமே எனக்கு....
-இந்திரா
இறுக்கமான மனம் கொண்டவளுக்கு ....
ராமனாக யாம் இருக்க மடல் எழுதினேன்...
பாட்டுக்கு மெட்டு எழுதும் கவிங்கன் அல்ல நான்….
பாட்டுக்கும் விரல் மெட்டுக்கும் கேட்டு எழுதும் கவிஞனும் இல்லை நான்....
என் கூற்றுக்குள் உதிப்பதை பாவையய் போற்றி பாடும் மணாளன் நான்....
மனதை பறிகொடுத்து உறவாட விளையும் ….
நான் உன் வரும்காலமாய்.....!!
-இந்திரா