தங்கையின் வெற்றி
நீ எட்டியப் படி
பலரும் தொட்டு பார்க்க
துடிக்கும் படி...
உன்னை நான் கண்ட வேளை எற்பாடு
நீ இப்போது புறப்பட தயாராகிவிட்டாய்....
அதற்கிடையில் ஓர் உறவு முளைத்து தழைத்தோங்கியது...
பரவும் பல வகை உறவுக்கிடையில்
உலவும் உயிராய் என்னுள் நீ மாறினாய்....
பல வாதங்கள் முண்ணுக்கு பிண்
முரணாக நம்மிடையே...
ஓயாத கடல் அலைகள் போல்
ஒரு நிமிடம் கூட ஒட்டாமல் இருக்கும் உன் உதடுகள்...
நிசப்தத்திலும் ஒலிக்கும் உன் குரல்....
யாரை கண்டும் ஒட்டிக்கொள்ளும் ஒட்டாம் புல் இல்லை
தனிமையை ரசிக்கும் துளசி மாடமும் இல்லை
பலரும் விரும்பி ஏற்கும் மலராய் நீ....
என்னுடன் வந்தாய்
என்னுடன் பயணித்தாய்
எனக்கு முன்னால் சென்றாய்
உன்னை தொடரும் நான்....
வாழ்த்துக்கள் தங்கோ.....❣️