சூரியனின் பரிவு
சூரியனின் பரிவு
பரந்து கிடந்த
புற்களின் நுனிகளில்
தூங்கும் பனித்துளிகள்
எழுந்த சூரியனின்
விழுந்த கதிர்வீச்சு
கோடுகளில்
மின்னிடும் கோளங்களாய்
தெரிய
கதிர்களோ
இதன் அழகில்
மயங்கி
அதனை எழுப்ப
மனமின்றி
மென்மையாய் பூமியை
காயவைத்து
கொண்டிருக்கிறது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
