அது ஒரு நெடும் மூச்சு
என்ன தென்றலே!
நான் ஒன்றும் உனக்கு
கடிதம் எழுத வில்லையே?
அதைத்தான்
ஏன் என்றுமூட்டை
கேட்க வந்திருக்கிறேன்.
அப்போது தான்
அவன் சொன்னான்.
மூட்டை மூட்டையாக
எழுதி வீட்டில் வைத்திருக்கிறேனே
எங்கு போயிருந்தாய்
இத்தனை காலமாக?
இன்றும்
நான் இங்கு வரவில்லையே.
அன்று நான் விட்ட
ஏக்கத்தின் நெடு மூச்சு அல்லவா
இது.
அப்படியானால்
இன்றே உனக்கு
எல்லாவற்றையும் அனுப்பி விடுவேன்!
அனுப்பினான்.
அனுப்பிய சுவட்டில்
அத்தனையும் திரும்பி வந்தன.
"டெட் லெட்டர் ஆஃபீஸ்"
முத்திரையுடன்.
காதலுக்கு
பிறப்பும் இல்லை
இறப்பும் இல்லை
தேதிகள் குறித்துக்கொள்ள.
அது ஒரு
நெடும் மூச்சு!
______________________________________