என்றன்தாய் மீனாட்சி யே - நேரிசை வெண்பா
இருவிகற்ப நேரிசை வெண்பா
(ஏந்திசைச் செப்பல் ஓசை)
நான்பிறந்தேன் நன்மதுரை நான்மாடக் கூடல்சேர்
தேன்போன்ற சோழவந்தான் ஊரினிலே – கோன்போன்ற
கன்னியப்பர் தங்குலத்தைக் காத்திடுவாய் என்றுந்தான்
என்றன்தாய் மீனாட்சி யே!
- வ.க.கன்னியப்பன்