ஆதி மனத்தின் ஆசை
வெண்ணிற பாதையில்
கருமை கப்பலில்
பயணித்து வருகிறது
உண்மையின் கண்ணீர் !
அதிகாலை ஆதவனை
இரவு வேதனையில்
மனதோடு பயணிக்கிறது
ஆழ்மன கண்ணீர் !
நடுநிசி வெண்ணிலவை
வேற்று மனதில்
சுமந்து தடுமாறுகிறது
சிறுமன வலிகள் !
பகல்நேர ஈட்டிகளை
மென்மை இதயத்தில்
விருப்பமில்லாமல் கடக்கிறது
கடக்க வேண்டிய வலிகளை !
தேனீக்களின் எச்சங்களை
தேவையில்லாமல் உடலோடு
சுமந்து நிற்கிறது
தோட்டத்து பூக்கள் !
இரவின் மடியில்
நேற்று பிறந்த
குழந்தை வாய் போல்
வாழ ஆசைப்படுகிறது
ஆண் மனமும் / மணமும் !