வேல்முருகானந்தன் சிங்காரவேல் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வேல்முருகானந்தன் சிங்காரவேல் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 04-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 651 |
புள்ளி | : 100 |
பறவைகளுக்கு கிடைத்த விடுதலை
ஏன்
பறவையின் சிறகுகளுக்கு கிடைக்க வில்லை !
தினம் பார்க்கும் கண்ணாடி
அழகாய் காட்டுகிறது !
வானில் விழும் மழைத்துளி
கோளவடிவம் கண்டேன் !
தினம் சுவாசிக்கும் நாசிகளுக்கு
தரிசனம் காதல்வாசம் !
தினம் பேசும் வார்த்தைகள்
கவிதைகளாய் பாய்கின்றன !
அலைபாயும் மனம் நினைவுகள்
குவளையில் மூழ்கின்றன - மகிழ்ச்சியில் !
தினம் எடுக்கும் எழுதுகோல்கள்
கவிதைகளை பொழிகின்றன !
தினம் பார்க்கும் வாசல்க்கோலங்கள்
தேவைதைகளாய் தெரிகின்றன !
தினம் பார்க்கும் கழுகு - ஏனோ
இன்று பெரிய - குயிலாய் !
என் வெட்கம் எந்தன்
எழுத்துக்களில் கண்டேன் !
தினம் பார்க்கும் கடலலைகள்
இன்று - மனதில்
மென்னிசை மௌனம் - மலை
வீச - குயில் வண்ணம்
ஓசை விழுந்தது
உந்தன் இடைக்குரல் !
காற்றுகள் மோதிக் கொள்கின்றன
வார்த்தை கடல் - தரை
தட்டுகின்றன - உன்
அழகின் சொகுசில் !
சொல்லத் தவிக்கும் உள்
நாக்கு - தயங்கி பறக்கும்
பருந்து - இடை நிற்கும்
கால்கள் !
சொந்த உழைப்பு - கற்கும்
சீவாத தென்னை பாலை
மொத்தக் குவியலாய்
உந்தன் இடை !
ஆழ்கடல் ஊற்று - நீ
நடுக்கடல் அலை - இரண்டின்
காதலாய் - எவரும்
காணாததாய் - நாம்!
பிற்பாதி நடுநி
நிழல் வானம் ரசித்த
வர்கள் முகில்
கூட்டம் ரசிப்பதில்லையே !
மனம் மகிழ ரசித்த
வர்கள் அந்த
மகிழ்ச்சியை ரசிப்பதில்லையே !
ராகம் ரசிக்க ரசித்த
வர்கள் உணர்ந்த
உணர்ச்சிகளை ரசிப்பதில்லையே !
சூரிய மறைவை ரசித்த
வர்கள் மெருகேற்றிய
கண்களை ரசிப்பதில்லையே !
பூக்கள் மலர ரசித்த
வர்கள் மலர்ந்த
நேரத்தை ரசிப்பதில்லையே !
வழிகளை உணர்ந்து ரசித்த
வர்கள் தந்த
உறவினை ரசிப்பதில்லையே !
மலர்க் கூட்டங்களை ரசித்த
வர்கள் தந்த
செடிகளை ரசிப்பதில்லையே !
கண்கள் கூறுகிறது
ஆயிரம் காந்தங்களின் கவர் காதலை !
சந்தனக் காப்பின்
சங்கமமாய் பெண் தெய்வ சிலை நீ !
நூறாயிரம் சவுக்கடியாய்
ஈர்க்கிறது உந்தன் ஒற்றை பார்வை !
உந்தன் கால்நக வண்ணக்
குழப்பி கூறுகிறது
உந்தன் மொத்த அழகை !
உயிரின் ஒரு ஓரம் நட்ட
ஒற்றை நாற்றாய்
வளர்கிறது எந்தன் மனம் !
உயர் சாதி மடுவாய்
கீழ்சாதி மலையாய்
நிற்கிறேன் மனதின் கலக்கத்துடன் !
மலை பேசும் மௌனமாய்
உன் கன்னம் தொட்டு செல்கிறது
கனத்த காதலுடன் !
கண்கள் கூறுகிறது
ஆயிரம் காந்தங்களின் கவர் காதலை!
சந்தனக் காப்பின்
சங்கமமாய் பெண் தெய்வ சிலை !
நூறாயிரம் சவுக்கடியாய்
ஈர்க்கிறது உந்தன் ஒற்றை பார்வை !
உந்தன் கால்நக வண்ணக்
குழப்பி கூறுகிறது
உந்தன் மொத்த அழகை !
உயிரின் ஒரு ஓரம் நட்ட
ஒற்றை நாற்றாய்
வளர்கிறது எந்தன் மனம் !
உயர் சாதி மடுவாய்
கீழ் சாதி மலையாய்
நிற்கிறேன் மனதின் கலக்கத்துடன்!
மலை மேகம் மௌனமாய்
உள் கன்னம் தொட்டு செல்கிறது
கனத்த காதலுடன் !
குட்டி குட்டி
பூக்களை பிய்த்து வந்து
சாமிக்கு வைக்கிறாள்
சாமி பூக்களை
மறைத்து வைத்து
இன்னும் பூக்கள் கேட்கிறார்
இவளின் தரிசனம்
பார்க்க...
பார்த்துக்கொண்டேயிருந்தேன்
பறக்கும் தேவதைகள்...
பரவசத்துடன்...
எல்லோரும் பறக்கிறார்கள்.
யாருக்கும் அங்கே
நடக்கத் தேவையில்லை.
வெள்ளைச் சிறகுகள்
வெடவெடத்து அடித்தன
உயர... உயர...
என் கண்களும்
உயரே... உயரே...
தேடி வந்தாள்
தேவதையொருத்தி- யென்
தேவை யாதென
உணர்ந்தவளாய்...
"நானும் உம்மைப்போல்
உயரே... வேண்டும்"
என்ன அதிசயம்!
எனக்கும் இப்போது
இரட்டைச் சிறகுகள்.
அசைத்துப் பார்த்தேன்.
இப்போது...
நானும் உயரே...
உயர உயர
உள்ளுக்குள் உதறல்...
உயரம் என்னவோ...?
உற்றுப்பார்த்தேன்.
ஆ....
வீழ்ந்துகிடக்கின்றேன்.
தேவதை வந்தாள்.
"சிறகுகள் அல்ல - தேவை;
தேவை
பயமற்ற சிறகுகள்-
பறப்பதற்