மைக்கிள் ஆன்றிலின் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மைக்கிள் ஆன்றிலின் |
இடம் | : ராஜாவூர், குமரி மாவட்டம் |
பிறந்த தேதி | : 27-May-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 339 |
புள்ளி | : 34 |
அரசு மேல்நிலைப் பள்ளி, தோவாளையில் ஆசிரியர்.
விளையாட்டுப் பாடவேளை உண்டு
ஆனால்,
விளையாட்டு மைதானம் இல்லை.
உங்களுக்குத் தெரியும்,
கிரிக்கெட்டால் மண்டை உடைபட்ட
கிழவிமார்களுக்குத் தெரியும்,
வீதியெல்லாம் எங்களுக்கு
விளையாட்டு மைதானங்கள்தானே.
வீட்டிலிருந்து புகார் வரும்-
ஒரே விளையாட்டென்று.
பதிலளிப்பாய்-
விஞ்ஞானம் மட்டுமல்ல,
விளையாட்டும்கூட கல்விதானே என்று.
குளிக்கவில்லை என்று புகார் வரும்.
'பார்க்க அப்படித் தெரியவில்லையே...'
இதுதான் உன் பதில்.
கோவிலுக்குப் போகவில்லை
இது புகார்.
கோவிலில் மட்டும் தெய்வம் இல்லை
இது உன் பதில்.
பள்ளிக் கள்ளன் என்னைப்
பள்ளியின் கள்வன் ஆக்கியவனே,
உன் மண்ணாங்கட்டி square
இன்னும் மண்டை
விளையாட்டுப் பாடவேளை உண்டு
ஆனால்,
விளையாட்டு மைதானம் இல்லை.
உங்களுக்குத் தெரியும்,
கிரிக்கெட்டால் மண்டை உடைபட்ட
கிழவிமார்களுக்குத் தெரியும்,
வீதியெல்லாம் எங்களுக்கு
விளையாட்டு மைதானங்கள்தானே.
வீட்டிலிருந்து புகார் வரும்-
ஒரே விளையாட்டென்று.
பதிலளிப்பாய்-
விஞ்ஞானம் மட்டுமல்ல,
விளையாட்டும்கூட கல்விதானே என்று.
குளிக்கவில்லை என்று புகார் வரும்.
'பார்க்க அப்படித் தெரியவில்லையே...'
இதுதான் உன் பதில்.
கோவிலுக்குப் போகவில்லை
இது புகார்.
கோவிலில் மட்டும் தெய்வம் இல்லை
இது உன் பதில்.
பள்ளிக் கள்ளன் என்னைப்
பள்ளியின் கள்வன் ஆக்கியவனே,
உன் மண்ணாங்கட்டி square
இன்னும் மண்டை
யுத்த களம்.
எப்படிச் சொல்வது...?
கட்டிய மனைவி பின்
கோவலன் சென்றுவிட்டான்.
வெட்டியே தீருவேன் என
மாதவி.
கஜினி முகம்மதுக்கள்
சலிப்புற்று ஓய்ந்துவிட்டார்.
இப்போது
கட்டத்துரைக்களின்
கட்டப்பஞ்சாயத்து.
ராவண பூமியில்
சூர்ப்பனகைகள்
மூக்கரிபடுகிறார்கள்.
எல்லை தாண்டியது
யார் குற்றம்?
மேனகாக்கள்
மிரட்டுகின்றனர்
காமப்பார்வைகள்
காரியம் சாதிக்கவில்லை.
பங்குபார்த்தது
யார் குற்றம்?
கைகேயியா?கோசலையா?
வனவாசத்தில்
பரதர்கள்.
சிம்சோனின் கூடாரத்தில்
டிலைலாக்கள் மயிரரிகிறார்கள்.
உரங்கொள்ளச் செய்தது
உணர்வென்றறியாமல்.
பாதுகைகள் பட்டு
அகலிகைகள் உயிரிழந்தா
ஆசையைத் துறக்க
ஆசைப்பட்ட ன்தானே
"புத்தன்."
தம்மை வாசப்படுத்திக்கொள்ள
உன்னை வசப்படுத்திக்கொண்டன
பூக்கள்.
மலர்:
எட்ட நிற்பதேன் என்
மன்னவனே!
கிட்ட வா மெல்ல-
நானுனக்கு
மொட்டவிழ்த்துக்
காட்டுகிறேன்.
கொட்ட விழித்தபடி
எத்தனை நாள்தான் என்னை
ஒட்டாமல் ரசித்திருப்பாய்…?
சூரியன்:
எட்டத்திலும் சுகமுண்டு
என்னவளே.
கிட்டவந்து தொட்டுவிட்டால்
பட்டழகே போயிடுவாய்
பட்டவளாய் ஆகிடுவாய்.
பாசக்காரி வாசமுன்னை
பசுமமாக்க விளையேனோ?
கொன்று உன்னை ரசித்திடவா
கொட்டக் கொட்ட விழித்திருந்தேன்…?
மலர்:
பூத்துதிரும் தேகமிது
போக்கிடமோ அறியிலது
வாடிவிடும் வாசமிது
வாலிபத்தின் சுவாச மது.
தேனிருக்கும் தேகமென்றால்
தேடிவந்து மொண்டுகொள்வார்
தீண்டியவன் மீண்டு சென்றால்
காய்ந்தால் எ