ஆர் எஸ் கலா - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  ஆர் எஸ் கலா
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  17-Sep-1977
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Aug-2014
பார்த்தவர்கள்:  2659
புள்ளி:  1046

என்னைப் பற்றி...

தமிழை மதிப்பேன்
கவிதையைக் காதலிப்பேன்
சிறு சிறு கிறுக்கல்களை கிறுக்கி விட்டு நகைப்பேன் ஈழத்து மண்ணில் பூத்த சின்ன மலர் 😊😊❤❤

என் படைப்புகள்
ஆர் எஸ் கலா செய்திகள்
ஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2019 8:57 pm

சொல்லிலே முள் எய்து
நெஞ்சத்தைப் புண்ணாக்கி/
உறங்கிய கோபத்தை
இறங்கியே உசுப்பி விட்டு/

நெருங்கிய என்னை
நெருப்பாக எரிய வைத்து/
இறுதியில் காதலை
எரியூட்ட வைத்தாய்/

உறுதியாக பிரிவு என்னும் ஒற்றை வார்த்தையை உரைத்து விட்டு /
நீ திசை மாறியே பயணத்தைத்
தொடர்ந்து விட்டாய்/

நரம்பெங்கும் விசமாக
ஏறித் தங்கி விட்டது /
உன்னோடு பழகிய இனிய
நிகழ்வுகள்/

என்னை மறந்து உன்
நினைவில் ஏங்குகின்றேன் /
என்னமோ நானும் உலகில் இயங்குகின்றேன்/

ஏதேதோ செய்து முடிக்கின்றேன்/
என்னவென்று புரியாமல்
முடிவில் நின்று முழிக்கின்றேன்/
பேச்சுடன் மூச்சையும் நிறுத்தும் வரை/
உன் நினைவுகளே என் நெடுஞ்சாலை /

( தேர்வுக்கு நன்றிக

மேலும்

ஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2019 8:54 pm

அரச்ச மஞ்சள் பூசட்டுமா?
அழகைக் கொஞ்சம் கூட்டட்டுமா?
இளைத்த உடலைத் தேத்தட்டுமா?
இளம்பிறையாக மாறட்டுமா?

முகத்தைப் பார்த்துப் பேசட்டுமா?
சுவற்றைப் பார்த்துச் சிரிக்கட்டுமா?
வெட்கத்தில் முகம் மறைக்கட்டுமா?
பக்கத்தில் உன்னை அழைக்கட்டுமா?

நகத்தைக் கொஞ்சம் கோதட்டுமா?
நிலத்தில் கோலம் காலால் போடட்டுமா?
நிழலைக் கண்டு நாணட்டுமா/
நிசப்தம் இன்றி ஓடட்டுமா?

உருக்கெண்ணெய் போடட்டுமா?
திருக்குச் சடை வாரட்டுமா?
திருத்திக் கொண்டை போடட்டுமா?
உதிர்ந்த மலரைக் கட்டட்டுமா?
கொண்டை மேலே செருகட்டுமா?

உமக்கு நானு யாரு மாமா?
உன்னோட தங்கத் தேர் ஆமா/
எனக்கு நீ யாரு மாமா?
உசுருக்கு உசுரான புருசன் ஆமா/ஓவியருக்கு வாழ்

மேலும்

ஆர் எஸ் கலா - எண்ணம் (public)
11-Nov-2019 10:26 am

வண்ண எழுத்தில் எண்ணம் பதிப்பதும் அழகே😊

மேலும்

ஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2019 1:54 pm

கட்டையான மீசக் கார
மச்சானே/
நெட்டையான உடம்புக் கார
அத்தானே/
தட்டப்பயறு தோட்டக் கார
மவனே/
பட்டம் போல ஆடுதய்யா யென்
மனமே/

குறும்பு பேச்சினாலே நெருங்கிடும் ஆளாக்கிபுட்டாய்/
குறு குறுப் பார்வயாலே என்னைய வளச்சிக்கிட்டாய்/
விறு விறுப்பான நடையினாலே தூண்டிலப் போட்டுக்கிட்டாய்/
கறவமாடு போல என்னையே
கிரங்க வச்சிக்கிட்டாய்/

எட்டுமுழ வேட்டியினாலே இறுக்கிப் புடிச்சிக்கிட்டாய்/
கட்டம் போட்டுக்கிட்ட சட்டையினாலே கட்டிப் போட்டுக்கிட்டாய்/
பஞ்சாயத்து மாப்பிள்ளையே மனசளவிலே
பொண்சாதியாய் ஆக்கிப்புட்டாய்/
சம்பா அரிசி சோறாக்கிப் போட்டுக்க ஆசய வளர்த்துப்புட்டாய்/

நானோ கறிவேப்பில பாசக்காரி/
ரோசாப் பூ ரோசக்கா

மேலும்

மிகவும் அருமை... 10-Nov-2019 1:09 pm
ஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Nov-2019 9:03 pm

காற்றோடு நாத்தாட மனமும்
கூத்தாட/
சேத்து மேலே பாதங்களையும்
விட/
வசந்த உணர்வு நெஞ்சத்தில்
பட/
காப்பு அணிந்த கரங்களும் களையைத் தொட/

கிளுகிளுப்போடு ஏர் ஓட்டி பொன்னையா பாட/
பாட்டின் பொருளை நாட்டாமை
தேட/
பாட்டுக்குள்ளே ஏழையின் கதையும்
கூட/
சிந்தனையோடு பெண்களும் நாத்து
நட/

நகரும் கருமேகமும் நாத்தின் முகம் பார்த்திட/
அள்ளிய நீரை வெள்ளமாய்த்
தெளித்திட/
நெல்லு மணிகளை வேளாண்மை
பூத்திட/
பார்க்கும் கண் மணியெல்லாம்
வியர்ந்திட/

தொட்டு அறுக்கக் காலமும் நேரமும் பிறந்திட/
விளைச்சலைப் பார்த்து வியாபாரி
குவிந்திட/
விதைத்தவன் மனமோ மகிழ்ச்சியில் மிதந்திட/
ஆனந்தக் கண்ணீர் விழியோரம்
வந்திட/

பிறக்கும்

மேலும்

நன்றி சகோ 07-Nov-2019 7:08 pm
அருமை 05-Nov-2019 2:35 pm
ஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2019 8:19 pm

வலங்காபுரி ஆளும் மகராணி
மவளே/
கொடாரிக் கொண்டைக் காரி
மவளே/
மோமணம் உடுத்தும் கோமாளி
மவளே/
வாடியென் வடகப்பட்டி மாமன்
மவளே/
காட்டிக்கடி கெண்டைக் கால
என்னவளே /

முறையோடு உன்னை அள்ளப்
போறேன்/
நுரையாக நானும் பூசிக்கப்
போறேன் /
புதுக் கதையெல்லம் சொல்லப்
போறேன்/
இராத்திரித் தூக்கம் பறிக்கப்
போறேன்/
புது மயக்கம் கொடுக்கப் போறேன்/

சாரை போலே ஊர்ந்திடப்
போறேன் /
எறும்பைப் போலே சுவைத்திடப்
போறேன்/
செவ்வாழைத் தண்டான இடையின்
மேலே/
மெதுவாக முத்தங்கள் பதித்திடப்
போறேன்/
அருகே அமரடி வாழத் தண்டேமரிக்கொழுந்து
செண்டே/

தேர்வுக்கு நன்றிகள் ❤❤🌹🌹🙏🙏

மேலும்

மிக்க நன்றிகள் 23-Oct-2019 2:39 pm
ARUMAI THOZHAR 23-Oct-2019 1:26 pm
ஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2019 1:26 pm

அடைமழை
குடையானது

#பனையோலை

மேலும்

நன்றி 22-Oct-2019 8:18 pm
அருமை 17-Oct-2019 5:57 pm
ஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Oct-2019 8:30 pm

வெள்ளோட்டம் பெருக மீன்
பள்ளம் விட்டு நீரோடு ஓட
பதறுகின்றான் தூண்டில்காரன் /

மேலும்

நன்றிகள் சகோ 14-Oct-2019 7:34 pm
அருமை 02-Oct-2019 10:24 pm
prakasan அளித்த கேள்வியை (public) மலர்1991 - மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Sep-2012 12:42 pm

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?

மேலும்

திருக்குறள் அடுத்து எழுத்து என்ற tab ல் கிளிக் செய்யவும் ... 16-Sep-2019 9:29 am
விடுதியில் நீ இருக்க பைத்தியமான் நான் இருந்தேன்... அருகருகே வந்தவுடன் சண்டை மட்டும் அதிகமடி... சண்டையிலே தெரியுதடி நாம் இரு குழந்தை என்று... என்றும் உன்னோடு #தாறா 30-Mar-2019 9:55 pm
கவிதை சமர்ப்பிக்கும் முறையை கூற முடியுமா நன்றிகள் 28-Aug-2018 6:25 pm
என் இதயத்தை திருடியவள் என்னிடமே கேட்கிறாள் " நலமா?" என்று 27-Mar-2018 7:28 pm
ஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2015 12:20 pm

பெண் தலை
குணிந்தால்
அது நாணம்
அதை நானும்
வரவேற்கின்றேன்.

அவை தொடர்ந்தால்
அது அடிமை இதை
நான் வண்மையாகக்
கண்டிக்கின்றேன்.

பெண்ணே தலை
நிமிர்ந்து நில்
சாட்டை போல்
சுழன்டு நில்.

சரித்திரம் புரிய
துணிந்து நில்
சாத்தான்களை
வீழ்த்தி நில்.

உலகம் போற்றும்
தூற்றும் இரண்டும்
உமக்குத் தேவை
என்று நினைத்து
சேர்த்தெடுத்து நில்

வெற்றிப் படியில்
படிப்படியாக ஏறவே
பிடி தடி ஒன்று தேவை
இவை இரண்டில்
ஒன்று உன்னை
ஊக்கப் படுத்தியே
தூக்கி நிறுத்தும்
சிகரம் கொண்டு.

வீரத்தமிழ் மகள்
என்று பெயர்
பெற்றது நம் இனம்
இதை நீயும் எண்ணிப்
பார் தினம்.

கன்னியான நீ
கண் கலங்க வேண்டும

மேலும்

அருமையான படைப்பு. வண்மை, குணிந்தால் அச்சுப் பிழைகளாக இருப்பின் திருத்துங்கள் சகோதரி. 04-Apr-2016 8:41 pm
புரட்சி தீ தெறிக்கும் வரிகள் ... எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் தான் குறையாய் ... பதிப்பை பதிக்கும் முன் படித்துப்பார்த்து பதித்தால் எழுத்துப்பிழைகள் தவிர்க்கலாம் !! வாழ்த்துக்கள் !! 26-Dec-2015 1:54 pm
சிறப்பு அழகு :) 26-Dec-2015 1:31 pm
:-) :-) மிக்க நன்றி மகிழ்ச்சி 19-Aug-2015 9:19 am
ஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2015 12:12 pm

மின்னும் பொன்னை
விண்ணில் வீசி.
வேடிக்கை செய்வது.
வாடிக்கையாம் ஆதவனுக்கு.

உலகம் எங்கும் ஒளி
பரப்பியே புதுமை
செய்வானாம்
பகலவன் புதுமை செய்வானாம்.

ஆழ்கடல் ஓரமாக
மழலை ஓடி விளையாடும் அந்தி
மாலையிலே செவ் நிறம் போன்ற உடை
அணிந்து கடலிலே மூழ்கி விடுவான் அவன் மூழ்கி விடுவான்.

கடல் கன்னியின் உள்ளத்தில் இறங்கி
தஞ்சம் அவள் அங்கம்
என அவளின் கங்கை மேனியுடன் சங்கமம்
ஆவான் சூரியன் சுட்டு எரிக்கும் சூரியன்.

ஆதவன் அவளை அணைத்ததுமே தன்னைக் கொடுத்து
எழுந்தாள் நீர் ஆவியாக கரு என்னும்
பொருளாக கரு மேகமாக உரு எடுத்தாள்.
கரும் உடலோடு உலா
சென்றாளாம் கரு மேகமாக வலம் வந்தாளாம்.

மேலும்

ஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2015 12:08 pm

காடு மேடு வயல்
எங்கும் நடந்தேன் என்
பாதம் காலணியைக்
கண்டதில்லை.

ஓயாது நடப்பேன்
ஒவ்வொரு நாளும்
கல்லு முள்ளும்
குத்தி வரும் இரத்தம்
கண்டு அஞ்ச வில்லை.

தோள் மேல் துண்டு
போட்டுக்க சட்டை
சாக்கடைப் பக்கம்
என் வேட்டை.

உன் பாட்டுக்கு
நானும் போட்டேன்
ஆட்டம் நாடு விட்டு
நாடு எடுத்தேன் ஓட்டம்.

இங்கே நாறிப்போச்சு
என் பிளைப்பு எப்போதுமே
எனக்குள் ஒரு வாடடம்.

போட்டேன் கோட்டு சூட்டு
கொஞ்சம் எடுப்பாகவே
இருக்கு சோடாப்புட்டி
உன் அத்தானுக்கு கூழான
கருமை கண்ணாடி கண்ணுக்கு
சும்மா தூக்கலாக இருக்கும்.

விமான நிலையம் பணி
எனக்குள்ளே ஒரே குஷி
கையிலே சூக்கேஸ்சி
கறுமம் உள்ளே நு

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (94)

user photo

வலியவன்

பெங்களூரு
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
ரூபின் தியா

ரூபின் தியா

மார்த்தாண்டம்
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்

இவர் பின்தொடர்பவர்கள் (95)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (94)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
முகில்

முகில்

திருச்சிராப்பள்ளி
சிவா (கர்ணன்)

சிவா (கர்ணன்)

திருச்சிராப்பள்ளி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே