வெளி நாட்டு அத்தானின் புலம்பல்

காடு மேடு வயல்
எங்கும் நடந்தேன் என்
பாதம் காலணியைக்
கண்டதில்லை.

ஓயாது நடப்பேன்
ஒவ்வொரு நாளும்
கல்லு முள்ளும்
குத்தி வரும் இரத்தம்
கண்டு அஞ்ச வில்லை.

தோள் மேல் துண்டு
போட்டுக்க சட்டை
சாக்கடைப் பக்கம்
என் வேட்டை.

உன் பாட்டுக்கு
நானும் போட்டேன்
ஆட்டம் நாடு விட்டு
நாடு எடுத்தேன் ஓட்டம்.

இங்கே நாறிப்போச்சு
என் பிளைப்பு எப்போதுமே
எனக்குள் ஒரு வாடடம்.

போட்டேன் கோட்டு சூட்டு
கொஞ்சம் எடுப்பாகவே
இருக்கு சோடாப்புட்டி
உன் அத்தானுக்கு கூழான
கருமை கண்ணாடி கண்ணுக்கு
சும்மா தூக்கலாக இருக்கும்.

விமான நிலையம் பணி
எனக்குள்ளே ஒரே குஷி
கையிலே சூக்கேஸ்சி
கறுமம் உள்ளே நுழைந்தவுடன்
கழுவச் சொன்னான் கக்கூஸ்சி.

நம் ஊரிலே சேலை கட்டி
வரும் பெண்களின் இடை
கொஞ்சம் தென் பட்டாலே
முகத்தை திருப்பி நின்று
முகம் சுழிப்பேன்.

இங்கே சொல்ல ஒண்ணாக்
கொடுமை தொடை தெரிய பாவாடை
கட கட என்று நடை நான் நிற்பதையும்
கண்டும் காணாது மாத்துகிறாள்கள்
உடை நான் கொடுக்க வேண்டும்
இந்தப் பணிக்கு விடை.

புரியாத மொழி அறியாத உணவு
உப்பும் இல்லை புளியும் இல்லை
சப்பன்னு போச்சு என் நாக்கு
தொட்டுக்க ஊறு காய் கேட்டால்
நொய் நொய் என்று பேசுகிறான்
திட்டுகின்றானா நாயே நாயே என்று
இல்ல நல்லாத்தான் பேசுகிறான
ஒன்றுமே புரியல நான் முழிக்கேன்
நின்று ஊர் விருந்தையும் மருந்தையும்
நினைத்த வண்ணம்.

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (18-Aug-15, 12:08 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 135

மேலே