வாழ்கை மரணத்திற்கு பின் சாத்தியமா
இறந்தவருக்காக அங்கே ஓர்
இறுதி அஞ்சலி -
இருந்தும் ,
இறந்தவர் மகாத்மாவா
மனிதரா
இல்லை மிருகமா என்பதிலே சந்தேகம் ?
உடலோடு ஒட்டிய உயிர் பிரிந்ததும்
கூடும் கூட்டமும் குமுறும் உள்ளமும்
கரை புரளும் துக்கமும்
கணிக்கும் மனிதனின் வாழ்வை !
சுமப்பவர்கள்
பாரமாகவும் பாக்கியமாகவும்
கருதும் இறுதி பயணம் !
கேள்விகளும் பதில்களும்
தானாகவே முளைத்துக் கொள்ளும்
விளம்பரமில்லாத உண்மையான
விமர்சனங்கள் வெளிவரும் தருணம் !
அந்நேரத்தில்
மனிதனின் வாழ்விற்கு
மதிப்பெண் இடப்படுகிறது -
அதன் அடிப்படையில்
அவரவருக்கு இறுதி மரியாதை !
சிதைந்த உடல்கள் சிலையாவதும்
சிலர் சிறப்பாவதும்
தன்னலம் மறந்த பொதுநல தியாகங்களே !
நல்லவர்கள் வாழ்வதும்
தீயவர்கள் சாவதும்
மரணத்திற்கு பின்னும் சாத்தியமே !