VINAYAGAMURUGAN - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : VINAYAGAMURUGAN |
இடம் | : PUDHUCHERRY |
பிறந்த தேதி | : 09-Jun-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 3714 |
புள்ளி | : 1753 |
நான் தமிழ் மீது மிகவும் பற்று கொண்டவன் . தான் வாழ பிறரை ஜெயிக்கும் சுயநல உலகில் பிறருக்காக நான் தோற்கிறேன் தினம் தினம் . நான் இறுக பிடித்தது தன்னம்பிக்கை , நான் மற்றவரிடம் எதிர்பார்ப்பது அன்பு மட்டும் எனது தெய்வங்கள் தாயும் தந்தையும் , எனது பொழுது போக்கு கவிதைகளை படிப்பதும் , பதிவதும் , எனக்கு பெருமை தமிழனாக பிறந்தது , நன்றி rnrnநண்பர்களே அன்பர்களே என்னுடையே முதல் கவிதை நூலான "அர்த்தமுள்ள கிறுக்கல்கள் " வேண்டுபவர்கள் கீழ் காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் . ஒரு புத்தகத்தின் விலை ருபாய் 90/-(நம் எழுத்து தள நண்பர்களுக்கு மட்டும் ருபாய் 70/-) தபால் கட்டணமாக ருபாய் 30/-. புத்தகம் வேண்டும் நபர்கள் தொடர்புகொள்ளவும் :rnrnசு . வினாயகமுருகன் rnஎண் 16. மாரியம்மன் கோவில் வீதிrnகவுண்டன் பாளையம் ,rnபாண்டிச்சேரி -605009rnrne - mail : vinayagamuruganpondy@gmail.com rnrnrn
என்றோ துளைத்துவிட்டதை
இன்றாவது கண்டுபிடிக்க
இரவு பகலாக ஏக்கத்தோடு எத்தனையோ மனிதர்கள் !
கால மாற்றத்தில்
கடுகளவும் காணப்படாத கருணை -
அறிவியல் வளர்ச்சியில்
அன்பிற்குத்தான் பற்றாக்குறை !
இனிமையை கொடுக்கும் கரும்பும்
நாட்கள் கடந்தும் கெட்டுவிடாத தேனும்
இயற்கை கொடுத்த கனிசுவையும் மாறிடாத போது
மனிதத்தன்மை மட்டும் மாறிவிட்டதேன் !
வதைகளைகூட ரசிப்பதும் வெறுப்பதும்
அவரவர் சாந்தவைகளாகிவிட்ட போது
நேயம் வெளிப்பட நியாயமான காரணம் இல்லை !
பகிர்ந்து உண்பதும் பரிவு காட்டுவதும்
துன்பத்தில் தோள்கொடுத்து துயர் கலைப்பதும்
தோற்றலில் தேற்றலும் என
எதுவுமே இன்று மனிதனிடம் காணப்படாத க
எல்லாம் போய்விட்டது என்று
எதெற்கெடுத்தாலும் சலித்துக்கொள்பவனே
சாதனைகளுக்கும் சாத்தியமிருக்கிறது என்பதை
சாமர்த்தியமாக கேள் !
போனது போகட்டும்
இன்றைய நாளை புதிதாக எடுத்துக்கொள் -
நாளை நல்லவைகள் நடக்கும் !
முடிவு என்பது எதற்கும் இல்லை
வெட்ட வெட்ட முளைக்கும் வேர் வாழ்க்கைக்கும்
உன் விட முயற்சிக்கும் காலம் வழிகொடுக்கும் என்பதை
கருத்தில் கொள்!
விழுந்ததை நினைத்து வேதனை படுவதை விட்டு விட்டு
எழுவதை எண்ணி எண்ணத்தை செலுத்து ,
நல்லதொரு பாடங்களை தோல்விகளும் கற்றுத்தரும் -
இது காலம் சொன்ன உண்மை !
கசப்பானவைகளே மருந்துகள் ,
காலம் தந்த அவமானங்களை அலட்சியப்படுத்தாமல்
வைராக்கியத
உனக்காக நீயே உருவாக்கிக்கொண்ட
சுயநல நியாயங்கள் !
உனக்கென வரும்போது மட்டும்
எல்லாமே நியாயமாய் தெரிவதின்
மாயம்தான் என்னவோ ?
எவருடைய வருத்தங்களிலும்
எவருடைய துன்பங்களிலும்
எவருடைய வறுமையியிலும்
பங்குகொள்ள பரந்த மனமில்லை உனக்கு -
யாரடா நீ ?
அவரவரின் விருப்பமில்லாமலேயே
அடுத்தவர்களுடையதை தனதாக்கிக்கொள்ளும்
கொடூர குணமுடையவனே -
யாரடா நீ ?
பொதுநலம் பாராமல்
தன்னலத்தை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடும்
மனிதநேயம் இல்லாத மிருகமே -
யாரடா நீ ?
உயிர்களின் வதையை மறந்து
உணவாக்கி கொண்டவனே
உனக்கு, உணர்வுகளின் வலி என்றைக்கு புரிய போகிறது ?
நேர்மையையும் நீதியையும் மறந்த
ரசிக்க தெரியாதவனுக்கு
ஓவியம்கூட கிறுக்கலாகத்தான் தெரியும் !
காலால் உதைத்த கல் சிலையாகிப்போனபொழுது
கைகள் தானாக வணங்கத்தொடங்குகின்றன !
அவமானங்களில் அமைதி -
மாபெரும் வாழ்க்கை ரகசியம் !
வாசல்கள்கூட நேர்கோடுகளை தாண்டி
சிக்கலான கோலங்களைத்தான் ரசிக்கின்றன!
தோல்விகளை கண்டு துவண்டுவிடாதீர்கள் -
எழுந்து வாருங்கள் மாணவர்களே !
எல்லாம் சிலகாலம்தான் -எதுவும் நிரந்தரம் அல்ல
தோல்விகளை தாண்டித்தான் சாதனைகள் !
இழந்ததை எல்லாம் மீட்டு விடலாம்
இமயத்தையும் கூட எளிதாய் கடந்துவிடலாம் !
கடுமையான பாதைகளில்தான்
காலம் புதையல்களை புதைத்து வைத்திருக்கிறது !
முயற்சியும் பயிற்சியும் முடியும் என்கிற எண்ணமும்
உங்கள் வெற்றியை எளிதாக்கும் யுக்திகள் !
எதிர்மறை எண்ணங்களை இன்றோடு விட்டுவிடுங்கள்
நேர்மறை எண்ணத்தோடு நீங்கள் முயலுங்கள் -வெற்றி நிச்சயம் !
நீட் தற்கொலை ,
முக்கிய செய்தி என்று
மீண்டும் மீண்டும் காட்டும் ஊடகங்கள் !
உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஊடக வாதிகள்
மீண்டும் மீண்டும் உணர்வுகளை தூண்டும்
ஊடக செய்திகள் !
வெறும் வாயை மென்ற
அரசியல் கட்சிகளுக்கோ வெற்றிலை மடித்து கொடுத்த மாதிரி
ஆளாளுக்கோர் ஆவேச கருத்து !
உயிர்பலிகளை ஊக்குவிக்க
ஆளுக்கொரு நிதி உதவி -
உண்மையில் நாளையும் ஒரு உயிர்
பலியிடப்பட காத்திருக்கிறது !
நிலைமையை புரிந்து கொள்ளாத போராளிகள் -
நீட் போராட்டமென்று
நீதியற்ற ஓர் போராட்டம் !
என்னதான் நடக்கிறது தமிழகத்தில் ?
நீட் தேர்வு என்ன -
தமிழகத்தை மட்டும்தான் இலக்காக்கி இருக்கிறதோ ?
இந்திய அளவி
நிறை வயிறு நிரம்பாத
நீண்ட வறுமை காலத்தில்
அரை வயிறு காஞ்சி கூட
அமிர்தமென்பேன் !!!!!!!!
கோடி கொட்டி வீடுகட்டிகுறைத்தூக்கம் தள்ளிவைத்து
கூரைவீடே பெரிதென்று
நிறைவோடு வாழ்ந்திருப்பேன் !!!!!!!!!!!!!!
ஆசை கொண்டு ஆஸ்த்திதேடி
அத்தனையையும் சேர்த்துக்கொண்டு
வேஷம்போடும் வாழ்க்கையை விட
வெறும் ஆறடியே வேண்டும் என்பேன் !!!!!!!!
வாழ்வென்பது ஓர் புரியாத புதிர் -
எதிர்பார்ப்பிற்கும் எதார்த்தத்திற்கும்
வித்தியாசம் அதிகம் ............
கனவுகளையும் கற்பனைகளையும்
பலநேரங்களில் போலியாக்கி இருக்கிறது வாழ்க்கை ................
நடக்குமென்பது நடக்காமல் போவதும்
நடக்காதென்பது நடத்தி காட்டுவதும் வாழ்க்கையின் விசித்திரம் ...............
அதுவழியில் இதோ எனது வாழ்க்கை .............
காலத்தின் பிள்ளையாய் பிறந்து
கட்டுக்கோப்பான வாழ்க்கையில் வளர்ந்தும்
எதார்த்த வாழ்க்கை என்னை
எங்கோ இட்டுச்சென்று விட்டது ................
நேர்மையாய் வாழ்ந்தும்
நேர்மையற்ற இந்த சமுதாயம்
என்னை நம்பிக்கை துரோகத்தால் வீழ்த்தி இருக்க
இருகால் வீழ்ந்து
எண்கால் சுமந்த பயணத்தில்
நன்கால் , தீங்கால் வாழ்ந்த வாழ்வை
முன்கால் பேசி
பின்காலுக்கு புகழும் பிழையும் சேர்த்திடுமே ................
நேசிக்க தெரிந்த உறவுகளை விட்டு
ஓர் நெடும் பயணம் -
வறுமையை விரட்ட ஓர்
வாழ்வியல் போர் ..................
பசியை போக்கும் பயணத்தில்
மரணம் கூட மலிவானதாய் -
ஊதியம் கேட்பதோ உழைப்பு
உழைப்பு கேட்பதோ ஊதியம் .............
விரட்டும் வறுமைக்கு பயந்து
முரட்டு பாதையிலும்
பயணிக்க வேண்டிய பரிதாபம் ..............
உயிரை ஒப்பிடும்போது
ஊதியம் குறைவுதான்
மானத்தை ஒப்பிட்டால்
மரணமும் மலிவுதான் ................
ஆட்டிப்படைபவனிடம் அடங்கி கிடக்கிறது காசு -
ஆழ்ந்து உழைப்பானவை
அடிமைப்படுத்துவதும் காசு ..............
உழைத்தவனை உண்மையில்
உறங்ககூடவிடவில்லை இறைவன்
விழிப்பதற்குள் விழிக
இருகால் வீழ்ந்து
எண்கால் சுமந்த பயணத்தில்
நன்கால் , தீங்கால் வாழ்ந்த வாழ்வை
முன்கால் பேசி
பின்காலுக்கு புகழும் பிழையும் சேர்த்திடுமே ................
கடவுள் கேட்கவில்லை கொடுக்கிறார்கள்
மனிதன் கேட்கிறான் மறுக்கிறார்கள் -
பணம் !!!!!!!!!!!!!!!!!!!!!!