புதிதென புரிந்துகொள்

எல்லாம் போய்விட்டது என்று
எதெற்கெடுத்தாலும் சலித்துக்கொள்பவனே
சாதனைகளுக்கும் சாத்தியமிருக்கிறது என்பதை
சாமர்த்தியமாக கேள் !

போனது போகட்டும்
இன்றைய நாளை புதிதாக எடுத்துக்கொள் -
நாளை நல்லவைகள் நடக்கும் !

முடிவு என்பது எதற்கும் இல்லை
வெட்ட வெட்ட முளைக்கும் வேர் வாழ்க்கைக்கும்
உன் விட முயற்சிக்கும் காலம் வழிகொடுக்கும் என்பதை
கருத்தில் கொள்!

விழுந்ததை நினைத்து வேதனை படுவதை விட்டு விட்டு
எழுவதை எண்ணி எண்ணத்தை செலுத்து ,
நல்லதொரு பாடங்களை தோல்விகளும் கற்றுத்தரும் -
இது காலம் சொன்ன உண்மை !

கசப்பானவைகளே மருந்துகள் ,
காலம் தந்த அவமானங்களை அலட்சியப்படுத்தாமல்
வைராக்கியத்தோடு வாழ்க்கையை தொடரு !

நிலைமை சீராகும்போது
நிந்தனைகளும் வாழ்த்துகளாய் மாறும் மறவாதே !

சோதனைகள்தான் உன் தகுதியை தீர்மானிக்கும்
தேர்வுகள் என்பதை தீர்க்கமாய் பதிந்துகொள் -
ஓர்நாள் உன்னை உலகம் புரிந்துகொள்ளும் -
புதிதாய் பார்க்கும் -
நாட்கள் ஒவ்வொன்றும் புதிதென புரிந்துகொள் !

எழுதியவர் : விநாயகமுருகன் (17-May-24, 9:23 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 162

மேலே