மற்றவை நேரில்

...
*********************
அழகே..
அவசரமாய்
ஒரு பேச்சுவார்த்தைக்குப்
புறப்பட்டுச் செல்வதால்
அறையில் என் மௌனத்தை
விட்டுச் செல்கிறேன்
நான் வரும்வரை
தனிமையில் இருக்கும்
என் மௌனத்தின்
பேச்சுத் துணைக்கு
உன் கண்களை அனுப்பி வை
திரும்பி வந்ததும்
உன் கண்களிடம் கொஞ்சம்
கனவுகள் கொடுத்தனுப்பி வைக்கிறேன்.
தத்தித் தத்தி நடைபழகும்
உன் காதல் இதயத்திடம்
கொடுத்துவிடு ..
மற்றவை நேரில்..
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-May-24, 2:29 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : matravai neril
பார்வை : 74

மேலே