வாழ்வியல் போர்

நேசிக்க தெரிந்த உறவுகளை விட்டு
ஓர் நெடும் பயணம் -
வறுமையை விரட்ட ஓர்
வாழ்வியல் போர் ..................

பசியை போக்கும் பயணத்தில்
மரணம் கூட மலிவானதாய் -
ஊதியம் கேட்பதோ உழைப்பு
உழைப்பு கேட்பதோ ஊதியம் .............

விரட்டும் வறுமைக்கு பயந்து
முரட்டு பாதையிலும்
பயணிக்க வேண்டிய பரிதாபம் ..............

உயிரை ஒப்பிடும்போது
ஊதியம் குறைவுதான்
மானத்தை ஒப்பிட்டால்
மரணமும் மலிவுதான் ................

ஆட்டிப்படைபவனிடம் அடங்கி கிடக்கிறது காசு -
ஆழ்ந்து உழைப்பானவை
அடிமைப்படுத்துவதும் காசு ..............

உழைத்தவனை உண்மையில்
உறங்ககூடவிடவில்லை இறைவன்
விழிப்பதற்குள் விழிகளுக்கு உயிரில்லை ............

ஏழையை பொறுத்தவரையில்
எல்லை இல்லாமலேயே நீள்கிறது
என்றைக்கும் வாழ்வியல் போர் !

எழுதியவர் : விநாயகமுருகன் (10-Aug-20, 10:37 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : vaazviyal por
பார்வை : 88

மேலே