நீட் தற்கொலை

நீட் தற்கொலை ,
முக்கிய செய்தி என்று
மீண்டும் மீண்டும் காட்டும் ஊடகங்கள் !

உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஊடக வாதிகள்
மீண்டும் மீண்டும் உணர்வுகளை தூண்டும்
ஊடக செய்திகள் !

வெறும் வாயை மென்ற
அரசியல் கட்சிகளுக்கோ வெற்றிலை மடித்து கொடுத்த மாதிரி
ஆளாளுக்கோர் ஆவேச கருத்து !

உயிர்பலிகளை ஊக்குவிக்க
ஆளுக்கொரு நிதி உதவி -
உண்மையில் நாளையும் ஒரு உயிர்
பலியிடப்பட காத்திருக்கிறது !

நிலைமையை புரிந்து கொள்ளாத போராளிகள் -
நீட் போராட்டமென்று
நீதியற்ற ஓர் போராட்டம் !

என்னதான் நடக்கிறது தமிழகத்தில் ?

நீட் தேர்வு என்ன -
தமிழகத்தை மட்டும்தான் இலக்காக்கி இருக்கிறதோ ?
இந்திய அளவில் எத்தனை மாநிலத்தில்
இருக்கிறது இந்த போராட்டம் ?

நம்பிக்கை ஊட்டவேண்டிய
ஊடகங்கள் அவநம்பிக்கை ஊட்டிக்கொண்டு இருப்பதுதான்
அநியாயம் !

அரசியல் என்னும் சுயநலவாதிகள்
அநியாய லாபத்திற்கு
பலியாக்கப்படும் பரிதாப உயிர்கள் எத்தனை எத்தனை ?

புரிந்துகொள்ளாதவரை பொதுமக்களுக்கு
நீட்டும் ஒரு புதிர்தான் !

தேர்வு என்பதை தைரியமாக எதிர்கொள்பவர்களுக்கே
வெற்றி எதார்த்தம் -
புரிந்து கொள்ளுங்கள் மாணவ செல்வங்களே !

உங்கள் எதிரில் இருப்பது பாறையாக இருந்தாலும்
உறுதியோடு உழையுங்கள்
பாறைகளும் பவுடராகிப்போகும் !

முடியும் என்று எதையும் எதிர்கொள்ளுங்கள்
முடியாதது ஏதும் இல்லை -
எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால்
எல்லாமே கிடைக்காது என்று அர்த்தம் இல்லை !

தோல்விகள் நிரந்தரமானவை அல்ல
வெற்றியும் நிரந்தரமானவை அல்ல
எல்லாம் மாறிக்கொண்டே இருப்பவை தான் !

நாளை நல்லதாகவே இருக்கும்
என்பதனை மட்டும் என்றைக்கும் மறக்காதீர்கள்
மரணத்தின் கைகளில் மாற்றம் இல்லை !

எழுதியவர் : விநாயகமுருகன் (13-Sep-20, 8:48 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : need tharkolai
பார்வை : 130

சிறந்த கவிதைகள்

மேலே