வாழ்க்கை துணை

என் வாழ்க்கை துணையொருத்தி
வாடிய தோலொருத்தி வாழ்க்கை முடித்து உறங்க சென்றாளே .

தாலிகயிறு சுமந்தவளே என் தாரமாக வந்தவளே,அழகு மேனியாய் வந்தவளே உன் தோல் சுருங்கி போனாலும் நீ என் அழகிதானடி.

பிள்ளைப்பேறு பல இருந்தும் இல்லை வேறு உன் துணை போல.எந்துணை இன்றி நீ தனியே சென்றாயே நான் துணை இன்றி இனி தவிப்பேனே.

பல் போன கிழவியே இந்த கிழவனை விட்டு போனதென்ன , என் கரம் பிடித்து வருபவளே இன்று கரம் விடுத்து சென்றதென்ன.

சமைத்து வைத்து காத்திருப்பாயே பசியோடு எனக்காக,இன்று நான் பசியோடு காத்திருக்கிறேன் உனக்காக உணவளிக்க வருவாயா.

என் உதிரம் சுமந்தவளே, இருபேறுகள் பெற்றவளே, தோல் கொடுத்த தோழியே நீ கிடையா தொலைந்து போனாயோ.

நித்தம் நித்தம் வேண்டினேன் இரு உயிரும் ஒன்றாய் செல்லவே,கடவுளும் துரோகம் செய்ததென்ன, உன்னை தனியே பிரித்து சென்றதென்ன.

கோபம் பல உன் மீது நான் கொண்டாலும்,அன்பை மட்டும் கொடுத்து என்னை அரவணைத்து சென்றவளே.


அசையா உன் உடல் அணைத்து உன்னுடன் உடன்கட்டை ஏறி வருவேனடி காத்திரு என்னவளே எனக்காக அங்கே உனக்காக வருவேன் மீண்டும் உன் கைக்கோர்க்க


அவளுடன் வாழ்ந்த நிமிடங்கள் இன்றுடன் முடிந்ததோ.
நீ இல்லா இல்வாழ்க்கை இருட்டில் மறைந்த நிழல் போல் ஆனதடி.
-பிரகாஷ் அழகர்சாமி

எழுதியவர் : பிரகாஷ் அழகர்சாமி (13-Sep-20, 9:21 pm)
Tanglish : vaazhkkai thunai
பார்வை : 231

மேலே