எழுந்து வா இளைய தலைமுறையே

தோல்விகளை கண்டு துவண்டுவிடாதீர்கள் -
எழுந்து வாருங்கள் மாணவர்களே !

எல்லாம் சிலகாலம்தான் -எதுவும் நிரந்தரம் அல்ல
தோல்விகளை தாண்டித்தான் சாதனைகள் !

இழந்ததை எல்லாம் மீட்டு விடலாம்
இமயத்தையும் கூட எளிதாய் கடந்துவிடலாம் !

கடுமையான பாதைகளில்தான்
காலம் புதையல்களை புதைத்து வைத்திருக்கிறது !

முயற்சியும் பயிற்சியும் முடியும் என்கிற எண்ணமும்
உங்கள் வெற்றியை எளிதாக்கும் யுக்திகள் !

எதிர்மறை எண்ணங்களை இன்றோடு விட்டுவிடுங்கள்
நேர்மறை எண்ணத்தோடு நீங்கள் முயலுங்கள் -வெற்றி நிச்சயம் !

எழுதியவர் : விநாயகமுருகன் (14-Sep-20, 9:24 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 435

மேலே